Health Tips for Eating Foods: மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் எது?.. மக்களே தெரிஞ்சிக்கோங்க., மறந்தும் சாப்பிடாதீங்க.!
துரித உணவு, குளிர்சாதன பெட்டியில் சேமித்து மீண்டும் சூடேற்றி சாப்பிடப்படும் உணவுகள் விஷமாக மாறும் தன்மையையும் கொண்டவை ஆகும்.
ஏப்ரல் 12, சென்னை (Health Tips): வீடுகளில் இன்றளவில் அத்தியாவசிய பயன்பாட்டுக்காக வாங்கி பயன்படுத்தப்படும் குளிர்பதன பெட்டிகளில், பலரும் தங்களுக்கு பிடித்த மற்றும் தாங்கள் தினமும் சமைக்கும் உணவுகளை (Fridge Storage Foods) பதப்படுத்தி வைத்து பின் மீண்டும் மறுநாள் அல்லது சில நாட்கள் கழித்து சுட வைத்து (Reheated Foods are Dangerous) சாப்பிடுவது உண்டு. நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை பொறுத்தமட்டில், அதனை குறைந்த அளவு சமைத்தாலும், மிதமான சூடுடன் சாப்பிடுவது நல்லது என்பது மருத்துவர்களின் கூற்று.
குளிர்பதன நிலையில் சேமிக்கப்பட்டு சூடேற்றப்படும் உணவுகள் ஆபத்தானவை: ஆனால், தற்போது அது பெரும் பெரும்பாலும் நடைபெறுவது இல்லை. அவசரத்திற்காக, வேறு வழியில்லை என்ற நிலைமை என பல காரணங்கள் கூறி இவ்வாறான செயல்கள் தொடர்கிறது. அந்த வகையில், கட்டாயம் நாம் மறுமுறை சூடுபடுத்தி சாப்பிட கூடாத உணவுகள் என்ற பட்டியல் இருக்கிறது. இந்த பட்டியலில் இடம்பெற்ற உணவுகள், ஏதேனும் ஒரு சூழலில் கட்டாயம் நமது உடல்நலனை பாதித்து மரணத்திற்கும் வழிவகை செய்யலாம். Gold Price Today: ரூ.54,000ஐ கடந்தது இன்றைய சவரன் தங்கத்தின் விலை; தொடர்ந்து உச்சக்கட்டம்.!
துரித உணவுகளில் மரணம் ஏற்பட முக்கிய காரணம்: பெரும்பாலான சமயங்களில் நாம் செய்தியாக கூட ஹோட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டவர் பலியானதாக கேள்விப்பட்டு இருப்போம். இதற்கு முக்கிய காரணமாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் வாங்கி சாப்பிட்ட உணவு குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தப்பட்டு, பின் மீண்டும் பயன்படுத்தப்பட்டது உணவு விஷமாகி மரணத்திற்கு வழிவகை செய்கிறது. ஏனெனில், ஒரு சில கடைகளில் பல நாட்கள் குளிர்பதனப்பெட்டியில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறான உணவுகள் கட்டாயம் நமக்கு தீங்கையே விளைவிக்கும். அதுபற்றி இனி விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்..
முட்டை, கீரையும் விஷமாக மாறும்: மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலில் சிக்கன் முதலிடத்தில் இருக்கிறது. சிக்கனை மறுமுறை சூடேற்றி சாப்பிடும் போது, அதில் இருக்கும் புரதச்சத்து மேலும் அதிகரித்து அதுவே விஷமாக மாறலாம். கீரையில் இருக்கும் நைட்ரேஸ் அடிக்கடி சூடுபடுத்தப்படும் போது நைட்ரேட்டாக மாறும், இது புற்றுநோயை உண்டாக்கும் பண்பை கொண்டதாகும். முட்டையில் இருக்கும் அதிக புரோட்டின், அடிக்கடி சூடுபடுத்தப்படுவதால் செரிமான பிரச்சனையை உண்டாக்கும், வயிற்றுக்கோளாறையும் ஏற்படுத்தும்.
அரிசி சாதமும் மரணத்தை தரலாம்: பலரின் விருப்ப உணவாக இருக்கும் காளானை மறுமுறை சூடுபடுத்தும்போது, அது விஷமாக மாறும் தன்மை கொண்டது. இதனை நாம் சாப்பிடும்போது செரிமான கோளாறு, வயிற்று உபாதையும் ஏற்படுத்தும். தினமும் நாம் அரிசி சார்ந்த உணவை கட்டாயம் எடுத்துக் கொள்வோம். சாதத்தை நாம் மீண்டும் சூடுபடுத்தும் பட்சத்தில், நச்சுத்தன்மை அதிகரித்து அது விஷமாக மாறும். Whooping Cough: வந்தது அடுத்த தலைவலி.. உலகளவில் அதிவேகத்தில் பரவுகிறது கக்குவான் இருமல் தொற்றுநோய்.!
புற்றுநோய்க்கு அச்சாரமிடும் மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணெய்: துரித உணவகங்களில் விற்பனை செய்யப்படும் சிக்கன் ரைஸ் போன்றவை சாப்பிட்டு பலர் மரணம் அடைந்ததற்கு இது ஒரு முக்கிய காரணமாகவும் கவனிக்கப்படுகிறது. வீடுகள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயை பலமுறை மீண்டும் மீண்டும், திரும்பத்திரும்ப சூடுபடுத்துவதால் அதன் அடர்த்தி அதிகரித்து இதயம் சார்ந்த நோய்கள் மற்றும் புற்றுநோய் கூட ஏற்படும். ஆகையால் முடிந்த அளவு மேற்கூறியுள்ள உணவுகளை சமைக்கும்போது, குறைந்த அளவு சமைத்தாலும் திருப்தியாக சாப்பிட்டு பின் மீண்டும் புதிதாக அதனை சமைத்து சாப்பிடுவது நல்லது.