ஏப்ரல் 12, பெய்ஜிங் (World News): கடந்த 2019 ஆம் ஆண்டு உலக நாடுகளுக்கு கொரோனாவை பரிசாக அளித்த சீனா, தற்போது அடுத்தடுத்த தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட வருகிறது. அவ்வப்போது உலக சுகாதார அமைப்பு இந்த தொற்று நோய்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுத்தும் வருகிறது. இந்நிலையில், தற்போது சீனாவில் வூப்பிங் (Whooping Cough) இருமல் எனப்படும் கக்குவான் இருமல் (Pertusis Cough) அதிகளவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 13 பேர்கள் பலியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது சீனாவில் மட்டுமல்லாது உலக அளவில் ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கிறது.

கடந்த ஆண்டை விட 34% அதிக பாதிப்பு: சீனாவில் இந்த ஆண்டில் தொடக்கம் முதல் பரவி வந்த கக்குவான் இருமல், மொத்தமாக 32,350 பேரை தற்போது வரை பாதித்துள்ளது. இதனால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு பதிவேடுகளை கவனிக்கையில், கடந்த ஆண்டில் இதே மாதம் வரையில் 1,421 பேர் மட்டும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த பாதிப்பு அளவு என்பது பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது. சீனா மட்டுமல்லாது பிலிப்பைன்ஸ், செக் குடியரசு, நெதர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இந்த இருமல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் மொத்தமாக கக்குவான் இருமலுக்கு 54 பேர் பலியாக இருப்பதாகவும், இது கடந்த ஆண்டு விட 34 மடங்கு அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Auditor Killed by Youth: அக்காவுக்கு பாலியல் தொல்லை; ஆட்டிடரை ஒரே அடியில் கைலாசம் அனுப்பிய தம்பி.. திருவள்ளூரில் சம்பவம்.! 

நோயின் பாதிப்பு மற்றும் அறிகுறிகள் விபரம்: கக்குவான் இருமல் என்பது போர்டெல்லா பேர்டுசிஸ் (Bordetella Pertussis Bacteria) என்ற பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோயாகும். இந்த தொற்றுநோய் மேல் சுவாசம் மண்டலத்தை நேரடியாக பாதித்து, காற்றுப்பாதையில் வீக்கத்தை ஏற்படுத்தி நச்சுக்களை வெளியிடும். இதனால் மரணமும் ஏற்பட வாய்ப்புள்ளது என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் அறிகுறியாக ஜலதோஷம், மூக்கடைப்பு, குறைந்த காய்ச்சல், லேசான இருமல் போன்றவை ஏற்பட்டு படிப்படியாக அவை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அறிகுறி இருந்தால் மருத்துவ பரிசோதனை நல்லது: இதனால் மேற்கூறிய அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான மருந்துகளை தொடக்கத்திலேயே எடுத்துக்கொண்டால், மரணம் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நோய்க்கு தடுப்பூசிகளும் உள்ளன, ஆகையால் பெரிய அளவிலான அச்சம் கொள்ள தேவையில்லை.