ஏப்ரல் 12, சென்னை (Chennai): உலகளவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலையை காட்டிலும், இந்தியாவில் தங்கத்தின் விலை என்பது எப்போதுமே உச்சம் தான். ஏனெனில் இந்தியாவில் மக்கள் தங்கத்தின் மீது காண்பிக்கும் ஆர்வம், மாநில-மத்திய அரசுகளின் நேரடி மற்றும் மறைமுக வரிகள் ஆகியவை தொடர்ந்து தங்கத்தின் விலையை அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சரவதேச அளவில் நிலவும் பல்வேறு போர்கள் மற்றும் பிற பிரச்சனைகளும், உலகளாவிய தங்க விநியோகம் மற்றும் நுகர்வை நேரடியாக பாதித்து விலையை உயர்த்த வழிவகை செய்கின்றன. அந்த வகையில், சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு வரலாற்றில் இல்லாத அளவு ரூ.50,000-ஐ கடந்தது. Whooping Cough: வந்தது அடுத்த தலைவலி.. உலகளவில் அதிவேகத்தில் பரவுகிறது கக்குவான் இருமல் தொற்றுநோய்.!
இன்றைய தங்கம் - வெள்ளி (Gold Silver Price Today) விலை நிலவரம்: இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை என்பது ரூ.54,000 ஐ தாண்டி இருக்கிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது, நேற்றைய விலையில் இருந்து சவரனுக்கு ரூ.640 அதிகரித்து இருக்கிறது. இதனால் இன்று தங்கத்தின் ஆபரண தங்கத்தின் விலை ரூ.54,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, கிராம் தங்கத்தின் விலையும் இன்று ரூ.80 உயர்ந்து, ரூ.6,805 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.86.50 க்கும், கிலோ வெள்ளியின் விலை ரூ.85,000 க்கும் விற்பனை செய்யப்டுகிறது. நேற்றைய விலையில் இருந்து வெள்ளி ரூ.1.50 அளவு உயர்ந்துள்ளது.