Palani Thaipoosam: பழனியில் தைப்பூச நிகழ்வுகள் கோலாகலம்; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்.!
உலகெங்கும் உள்ள தமிழர்கள், தங்களின் பேரன்பை வெளிப்படுத்தும் முருகனின் தைப்பூச திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
ஜனவரி 25, பழனி (Dindigul News): தென்னிந்தியாவில் வாழும் மக்களால் பிரதானமாக கௌரவிக்கப்டும் கடவுள் முருகனின் ஆலயங்களில், தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்படும். 12 நட்சத்திரங்களில் 8 வது நட்சத்திரமான பூச நட்சத்திரத்திம், முழு பௌர்ணமி நாளில் ஒன்றாக கூடும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் ஒவ்வொரு முருகன் கோவிலும் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பிவழியும்.
தருகாசுரனை வதம் செய்த பழனி முருகன்: தமிழர்களின் வழிபாட்டு முறைகளில் தைப்பூச திருவிழா கொண்டாட்டம் என்பது தொன்றுதொட்டு இருந்து வருவது தேவார பாடல்களில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் (Palani Murugan Temple), முருகன் அசுரன் தருகாசுரனை வதம் செய்த நாளாகவும் சிறப்பிக்கப்படுகிறது. Cop Dragging Girl Protester: பெண்ணை பிடிக்க தலைமுடியை இழுத்து கீழே தள்ளிய காவலர்கள்; அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!
மக்களால் வெள்ளத்தால் நிரம்பி வழியும் பழனி: இந்த நாளினை முன்னிட்டு விரதம் இருந்த முருக பக்தர்கள் பலரும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிக்கு காவடி, பால்குடம், அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்ற பாதையாத்திரை செல்வார்கள். இதனால் பழனி நகரமே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி இருக்கும். தைப்பூச கொண்டாட்டம் தமிழ்நாடு மட்டுமல்லாது தமிழர்கள் இன்றளவும் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலும் கொண்டாடப்படும்.
தைப்பூச தேரோட்டம்: தைப்பூசத்தினை முன்னிட்டு கொடியேற்றி 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்ற நிலையில், நேற்று திருக்கல்யாண வைபோகம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இன்று தைப்பூச தேரோட்டமும் நடைபெறுகிறது. வரும் 28ம் தேதி தெப்ப தேரோட்டம் மற்றும் கொடியிறக்கத்துடன் தைப்பூச திருவிழாக்கள் நிறைவு பெறுகின்றன. பழனியில் குவிந்துள்ள பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட அளவிலான பாதுகாப்பை உறுதி செய்ய காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.