Liquid Nitrogen Foods: வயிற்றில் விழுந்த துளை; இவ்வுளவு பேராபத்து மிக்கதா திரவ நைட்ரஜன்?.. அதிர்ச்சியூட்டும் தகவல் இதோ.!

ஸ்மோக் பீடாவை தொடர்ந்து, சமீபகாலமாக ஐஸ் பிஸ்கட் பக்கம் இளைஞர்களின் பார்வை திருப்பினாலும் அதனால் ஏற்படும் உடல்நலக்குறைவு பதறவைக்கிறது.

Liquid Nitrogen (Photo Credit: @CNN X)

மே 05, சென்னை (Chennai News): கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த சிறுவன் ஒருவர், திரவ நைட்ரஜனை பயன்படுத்தி உறைய வைக்கப்பட்ட பிஸ்கட்டை சாப்பிட்டதும் கடும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு அலறியது தொடர்பான காணொளி வைரலாகியது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை திரவ வடிவிலான நைட்ரஜனை பயன்படுத்தி பதப்படுத்தப்பட்ட உணவுகளை விற்பனை செய்யவும் தடை விதித்தது. மீறி அதனை விற்பனை செய்வோருக்கு ரூ.2 இலட்சம் அபராதம் விதிக்கப்படவும் எனவும் கண்டிக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை தெரிவித்துள்ளனர். அதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியைச் சார்ந்த 30 வயது இளைஞர் நண்பர்களுடன் பப்புக்கு சென்று, காக்டெயில் எனப்படும் பானத்தை குடித்துள்ளார். அந்த பானத்தில் திரவ வடிவிலான நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அடுத்தடுத்து என இரண்டு காக்டெயிலை இளைஞர் குடித்ததால், அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு அடி வயிற்றில் வலி மற்றும் வீக்கம் ஆகியவற்றை உணர்ந்துள்ளார். Benefits Of Cumin Water: உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சீரக தண்ணீரின் பயன்கள்..! 

உணவு பாதுகாப்பு சட்டம் கூறுவது என்ன? உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட அவருக்கு, 10 நாட்கள் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் உடல்நலம் தேறியது. மருத்துவ சிகிச்சையின் போது சோதனையில் அவரது அடி வயிற்றுப் பகுதியில் ஒரு துளை ஒன்றும் உருவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது. திரவ நைட்ரஜன் கலக்கப்பட்டு இருந்த காக்டெயில் பானத்தை அவர் ஆவியாவதற்கு முன்னதாகவே ஆர்வ மிகுதியில் குடித்ததால், இந்த துயரம் நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ஹரியானா மாநில அரசு அச்சமயமே திரவ வடிவிலான நைட்ரஜன் சார்ந்த உணவுகளுக்கு தடை விதித்தது. திரவ வடிவிலான நைட்ரஜனை பொறுத்தமட்டில், அது உணவுப்பொருள் மீது நேரடியாக பயன்படுத்துவது மிகப்பெரிய பின் விளைவை ஏற்படுத்தும். அதனை இறைச்சி போன்ற உணவுகளை பதப்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும். நமது உணவு பாதுகாப்பு சட்டமும் அதையே கூறுகிறது. ஆனால் வெளிநாடுகளில் சில உணவுகளை பதப்படுத்தி பார்வையாளர்களை கவர்வதற்காக திரவ நைட்ரஜன் சார்ந்த உணவுகளை சாப்பிடும் நபர்கள், அது குறித்த வீடியோவை வெளியிட்டதால் வைரலானது. அந்த வீடியோவுடன் திரவ நைட்ரஜன் உணவு மீதான ஆர்வமும் ஆங்காங்கு ஈசல் போல முளைத்து, சிறார்களிடம் அதிகம் பரவி இருக்கிறது. இதனை பார்க்கும் சிறார்கள் ஆர்வமிகுதியில் அதனை வாங்கி சாப்பிட்டாலும், அவை உடனடி மரணத்தையும் வரவழைக்கும் தன்மை கொண்டவை என்பது அவர்களுக்கு தெரியப்போவது இல்லை. Minor Girl Sexual Abuse: குடோனில் 14 வயது சிறுமியை சீரழித்த காதலன்; வீடியோ எடுத்து மிரட்டிய நபர்.! அதிர்ச்சி சம்பவம்.! 

பார்வையாளர்களை கவர நினைத்து உயிருடன் விளையாட்டு: திரவ வடிவிலான நைட்ரஜன் என்பது மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் குளிர் வெப்ப நிலையை கொண்டதாகும். நமது ஊர்களில் இயல்பு வெப்பநிலை 27 டிகிரி இருக்கும் எனில், ஊட்டி போன்ற இடங்களுக்கு செல்லும்போது சாதாரண பருவ நாட்களில் 19 டிகிரி முதல் வெப்பநிலை பதிவாகும். ஊட்டி குளிருக்கே பலரும் ஆடைகளை இறுக்கமாக அணிந்து, நடுநடுங்கி கொண்டு இருப்பார்கள். பனிக்காலங்களில் ஊட்டியில் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி வரை செல்லும். ஆனால் மைனஸ் 196 டிகிரி என்பது, பூஜ்ஜியத்திற்கு கீழ் பன்மடங்கு குறைந்த வெப்பநிலை கொண்டதாகும். இந்த குளிர்நிலையில் உணவுகளை பதப்படுத்த மட்டுமே திரவ நைட்ரஜன் உபயோகம் செய்யப்படுகிறது. இதனை சரியாக கையாளாத பட்சத்தில், அதனை பயன்படுத்தும் நபரின் கைகள் கூட உறைந்து போகும் வாய்ப்பும் உள்ளது. நைட்ரஜன் எந்த வாயுவுடனும் வினை புரியாமல் இருப்பதால், அது நச்சுத்தன்மை இல்லாதவராக கருதப்பட்டாலும், தீப்பற்றவும் வாய்ப்பு இல்லாதது எனினும், அதனை பயன்படுத்தி பார்வையாளர்களை கவர செய்யப்படும் முயற்சிகள் மிகவும் அனைத்தும் ஆபத்து மிகுந்தவையாக அமைகின்றன. திரவ நைட்ரஜன் சாதாரண வெப்ப நிலையில் எளிதில் ஆவி ஆகிவிடும் திரவம் எனினும், அந்த புகையை நாம் சுவாசிப்பது அல்லது அதனை ஆவியாவதற்கு முன்பு அந்த உணவுப் பொருளை சாப்பிட முயற்சிப்பது கட்டாயம் நமது செல்களை உடனடி குளிர்ச்சி தன்மைக்கு அழைத்துச் சென்று மரணத்திற்கும் வழிவகை செய்யும். Congress District Leader Mystery Death: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரித்துக்கொலை? மாயமானவரின் உடல் சடலமாக மீட்பு.! 

ஸ்மோக் பீடாவின் வரிசையில் ஐஸ் பிஸ்கட்: இறைச்சிகளை பயன்படுத்த மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கீழ் இருப்பதே போதுமானது. அந்த சமயத்தில் நுண்ணுயிரிகள் உறைந்த நிலையில் இருக்கும் என்பதால், உணவும் கெட்டுப் போகாது. திரவ நைட்ரஜனை பயன்படுத்தி உணவு பொருட்களை பதப்படுத்தினாலும் அரசின் விதிமுறைக்குட்பட்டே அதனை செயல்படுத்த வேண்டும். அவை உணவுகளின் மீது நேரடியாக பயன்படுத்தி சமைக்க கூடாது என்பது மிகப்பெரிய விதிமுறைகளில் ஒன்றாகும். நைட்ரஜனை பயன்படுத்தி பதப்படுத்தப்பட்ட உணவை சிறிது நேரம் சாதாரண வெப்பத்தில் வைத்து, நைட்ரஜன் ஆவியான பின் அதனை சமைத்து சாப்பிடலாம், இதனால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. தற்போது வெளியாகி வைரலாகும் வீடியோக்களில் நைட்ரஜன் புகையை பார்த்து வியக்கும் பலரும், அதனை தாங்களும் சாப்பிட எண்ணி அதில் இருக்கும் ஆபத்து தெரியாமல் விளையாடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஸ்மோக் பீடா எனப்படும் பீடாவும் வைரலாகியது திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு அதனை நேரடியாக நாம் சாப்பிட்டால், கட்டாயம் உயிரிழப்பை கூட சந்திக்க நேரிடும்.