மே 04, திருநெல்வேலி (Tirunelveli Crime News): திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் (Congress Party Nelllai East District Leader KPK Jayakumar). இவர் திசையன்விளை கரைசுத்து புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். 2024 மக்களைவைத் தேர்தலில், இவர் காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து இருந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களாகவே ஜெயக்குமாரை காணவில்லை என, அவரின் மகன் கருத்தையா ஜாப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

மரண வாக்குமூலமாக கடிதம்: இதனிடையே, கடந்த ஏப்ரல் 30ம் தேதி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு, மரண வாக்குமூலம் என்ற தலைப்பில் ஜெயக்குமார் கடிதம் அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தில், எனது வீட்டின் முன்பு சிலர் நோட்டமிட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் திருட்டுசெயலில் ஈடுபட நினைத்தனர். அவர்கள் எனக்கு கொலைமிரட்டல் விடுத்தவாறு வீட்டினையே சுற்றி வருகிறார்கள்" என கூறியுள்ளார். Sulawesi Floods: இந்தோனேஷியாவில் கொட்டித்தீர்த்த கனமழை; கடும் வெள்ளத்தில் சிக்கிய சுலாவெசி தீவு.. 14 பேர் பலி.! 

பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை? இந்த கடிதத்துடன் ஜெயக்குமார் நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகர், நெல்லை நாடாளுமன்ற தொகுதி மேற்பார்வையாளர் கே.வி தங்கபாலு ஆகியோரின் பெயரையும் குறிப்பிட்டு கொடுத்திருந்தார். இதில் ரூபி ரூ.70 இலட்சம் வரை ஜெயகுமாரிடம் பணம் வாங்கிவிட்டு, பணத்தை கேட்டால் செல்லப்பாண்டியன் என்பவரின் மூலமாக கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் நேரத்தில் கே.வி தங்கபாலு செலவுகளை கவனிக்கசொன்னாத்தால், ரூபியிடம் ரூ.11 இலட்சமும் கேட்கப்ட்டதற்கு, ரூபி தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்: ஜெயக்குமார் மாயமான நாளில் இருந்து அவரின் செல்போன் அனைத்து வைக்கப்பட்டு இருந்த காரணத்தால், அவரின் குடும்பத்தினர் பதற்றமான சூழலுக்கு உண்டாகியிருந்த வேலையில் அவரின் சடலம் எரிந்த நிலையில் உவரி தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில், 3 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்ற சூழலும் உண்டாகி இருக்கிறது.