Turtle Nesting Season in Tamilnadu: 2 லட்சத்து 15 ஆயிரம் ஆமைகளுக்கு புதுவாழ்வு; சத்தமே இல்லாமல் சாதனை செய்த தமிழ்நாடு வனத்துறை..!
இந்த தகவலை அத்துறையின் கூடுதல் செயலர் உறுதி செய்தார்.
ஜூன் 14, சென்னை (Chennai): தமிழ்நாடு வனத்துறை சார்பில், ஆமைகளின் பருவக்காலத்தை முன்னிட்டு 8 கடலோர மாவட்டங்களில் ஆமைக்குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்பட்டு இருந்தது. இதன் வாயிலாக ஆமைகளின் முட்டைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றின் இனவிருத்திக்கு உதவி செய்யப்பட்டன. தற்போது முட்டைகள் அனைத்தும் பொரிந்து குஞ்சுகள் உண்டாகியதை தொடர்ந்து, அவை கடலில் விடப்பட்டன. இதுகுறித்து சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் காடுகள் துறைக்கான கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 6 Year Old Girl Rape & Killed: தாயுடன் உறங்கிய 6 வயது சிறுமியை கடத்திச்சென்று கற்பழித்து கொலை; உ.பி லாரி ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.!
புதிய முன்னெடுப்பால் சாத்தியமான செயல்:
அந்த பதிவில், "ஆமை கூடு கட்டும் பருவத்தில், தமிழ்நாடு 2 இலட்சத்து 15 ஆயிரம் ஆலிவ் ரிட்லி குஞ்சுகளை வெளியிடுகிறது. இதன் வாயிலாக நாங்கள் ஆலிவ் ரிட்லி ஆமைகள் கூடு கட்டும் பருவத்தை நிறைவு செய்கிறோம், தமிழ்நாடு வனத்துறையின் பாதுகாப்பு முயற்சிகள் மூலமாக, இந்த ஆண்டில் 2 இலட்சத்திற்கும் அதிகமான ஆமைக்குஞ்சுகள் கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில், 2024ம் ஆண்டு 8 மாவட்டங்களில் 53 ஆமை குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டன. Van - Lorry Collision 7 Died: மீனவர்களை ஏற்றிச்சென்ற வேன் - லாரி மோதி பயங்கர விபத்து; 7 பேர் பரிதாப பலி.. அதிவேகத்தில் நடந்த சோகம்.!
கடும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி:
இரவு நேரங்களிலும் கடற்கரைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் ஆர்வம் மற்றும் உதவியுடன் வனத்துறையினர் 2,58,755 ஆமை முட்டைகளை சேகரித்தோம். ஆழ்கடலில் என்றென்றும் பயணித்த 2,15,778 ஆமைக் குழந்தைகளை நாங்கள் வெற்றிகரமாக வெளியிட்டுள்ளோம். கடந்த 2023ம் ஆண்டில் 1,82,917 ஆமை குட்டிகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அவை மென்மேலும் அதிகரித்துள்ளன. இது ஆமை பாதுகாப்பு திட்டத்தில் புதிய மைல் கல் ஆகும். 122 வனத்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் 100 பேர் உதவியுடன், இரவு-பகல் பாராது செய்த உழைப்பு கிடைத்த வெற்றியாக 2 இலட்சம் ஆமைகள் கடலுக்குள் சென்றுள்ளன" என தெரிவித்துள்ளார்.