AP Krishna, Van - Lorry Collision (Photo Credit: @ANI X)

ஜூன் 14, கிருஷ்ணா (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம், க்ரிதிவேனு மண்டல், சீடனப்பள்ளி பகுதியில் இன்று காலை மீனவர்களை ஏற்றிச்சென்ற வேன் ஒன்று, கண்டைனர் லாரியின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

7 பேர் பரிதாப பலி:

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது 5 பேரின் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில், 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. Gold Smuggling in Trichy: ஜூஸ் மெஷினில் ரூ.1.83 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்; திருச்சி விமான நிலையத்தில் அதிரடி.! 

முந்திச்செல்ல முயன்று நடந்த சோகம்:

விபத்து குறித்து தகவல் அறிந்த மச்சிலிப்பட்னம் காவல் கண்காணிப்பாளர் சுபானி, நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். விசாரணையில், மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு பயணம் செய்த டிராக்டரை, வேன் ஓட்டுநர் ஓவர்டேக் செய்ய முயற்சித்துள்ளார். அச்சமயம் கண்டைனர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

மேற்படி விபரங்கள் காத்திருக்கின்றன:

அதிகாலையில் விபத்து நடந்த காரணத்தால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் 3 கி.மீ வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளன. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மீட்பு பணிகளில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்திற்கான காரணம் மற்றும் விபத்தில் பலியானோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.