Junk Foods: குழந்தைகள் ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கத்தைவிட இதோ அதற்கான வழிமுறைகள்..!
உங்கள் குழந்தைகள் ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மார்ச் 16, சென்னை (Health Tips): இன்றைய குழந்தைகள் பெரும்பாலும் ஜங்க் (Junk Food) ஃபுட்களையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். வண்ணமயமான பாக்கெட்கள், அதிக சுவை தரக்கூடிய திண்பண்டங்கள் என அனைத்தையும் குழந்தைகள் விரும்பி உண்கின்றனர். ஜங்க் ஃபுட் சாப்பிடுவதில் இருந்து குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது. இதைப்பற்றிய முழு தொகுப்பையும் இதில் நாம் பார்ப்போம். Transgender Attacking Police: மது போதையில் தகராறு செய்த 2 திருநங்கைகள் – காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்..!
பெரும்பாலும் பெற்றோர்களை பார்த்து தான் பிள்ளைகள் பல விஷயங்களை கற்றுக்கொள்ளும். அதனால் முதலில் பெற்றோர்கள் ஆரோக்கியமான உணவு முறைகளை சமைத்து கொடுத்து குழந்தைகளை சாப்பிட சொல்ல வேண்டும். நல்ல ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், தானிய வகைகள் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிட வைக்க வேண்டும்.
சமயலறை: சமயலறையில் பல வகையான ஊட்டச்சத்து நிறைந்த திண்பண்டங்கள் வைத்து கொள்வது நல்லது. வீட்டில் இருக்கும் போது சமயலறை மற்றும் உணவு அருந்தும் இடம் என இந்த இடங்களில் மட்டும் உணவு அருந்த வேண்டும் என்ற பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். உணவு அருந்தும் நேரத்தை சரியாக ஒதுக்கவேண்டும். மேலும், தொலைக்காட்சி மற்றும் செல்போன்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
ஊட்டச்சத்து உணவுமுறைகள்: ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றியும் உணவு முறைகள் குறித்தும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் நேரும் விளைவுகள் பற்றியும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்: குழந்தைகளுக்கு ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும். இவ்வகை உணவுகளை அவர்களுக்கு வாங்கி கொடுக்காமல், அவர்களுக்கு சத்துள்ள உணவுகளை உண்பதற்கு வழிவகை செய்ய வேண்டியது பெற்றோரின் கடமையாகும். தினமும் உடற்பயிற்சி செய்ய கற்றுத் தர வேண்டும். அவர்களுக்கு எளிதில் புரியும்படி, ஜாலியான முறையில் சொல்லித் தர வேண்டும். மேலும், உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும் எனவும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
மருத்துவ ஆலோசனை: இறுதியில், குழந்தைகள் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தடுக்க இயலவில்லை என்றால், தாராளமாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.