Karthigai Deepam 7th Day: பஞ்ச ரதத்தில் மக்களுக்கு காட்சிதந்த அருணாச்சலேஸ்வரர்: வீடியோ உள்ளே.!

தீபத்தையொட்டிய இறுதி நாட்கள் ஊருக்குள் மக்கள் பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால், பலத்த பாதுகாப்பு பணியில் பல்லாயிரக்கணக்கான காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

Tiruvannamalai Chariot 7th Day (Photo Credit: @ANI X)

நவம்பர் 23, திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழா மற்றும் கிரிவல நிகழ்வுகள் உலகப்பிரசித்திபெற்ற நிகழ்வாக கருதப்படுகிறது. இதனால் தீப நாளில் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

கார்த்திகை தீபத்தையொட்டிய நாட்கள், திருவண்ணாமலை நகரில் பலஇலட்சம் மக்கள் கிரிவலம் செல்ல குவிந்துவிடுவார்கள். வெளிநாட்டை சேர்ந்த நபர்களும், இந்து மதத்தின் மீதான நம்பிக்கையை உணருபவர்கள் திருவண்ணாமலை வந்து பக்தர்களாக வாழ்ந்து செல்வது இயல்பு.

நடப்பு ஆண்டில் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை மலைமீது ஏற்றப்படும் கார்த்திகை தீபம், நவம்பர் மாதம் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இதனை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி நாளில் தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. Kartik Aryan Birthday Party: நடிகர் கார்த்திக் ஆர்யனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட பிரபல நடிகைகள்: விபரம் இதோ.! 

Tiruvannamalai Chariot Festival (Photo Credit: @ANI X)

இந்நிலையில், கார்த்திகை தீபத்தின் 7வது நாளான இன்று, அருணாச்சலேஸ்வரர் பஞ்ச ரத்தத்தில் வீதிஉலா வந்து மக்களுக்கு அருள்பாலித்தார். இதனை நேரில் காண இயலாதவர்கள், இணையவழியில் கண்டுகளிக்க நேரடி ஒளிபரப்புகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் வீடியோ இதோ.

அரசின் சார்பாக தீபத்திருவிழா நாளில் தமிழகத்தில் மதுரை, திருச்சி, சேலம், சென்னை, திருநெல்வேலி, செங்கோட்டை உட்பட முக்கிய நகரங்களில் இருந்து திருவண்ணாமலை செல்ல சிறப்பு பேருந்துகளும், இரயில் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்படும். தீபத்தையொட்டிய இறுதி நாட்கள் ஊருக்குள் மக்கள் பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால், பலத்த பாதுகாப்பு பணியில் பல்லாயிரக்கணக்கான காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.