Panguni Uthiram 2024: இன்று பங்குனி உத்திரம்.. கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை.. தொடங்கி முடியும் நேரம் என்ன?.. விபரம் இதோ.!

ஆதலால், இன்று முருகன், சிவன், ராமர் கோவில்களுக்கு சென்று குடும்பத்துடன் வழிபட்டால் நலன் கிடைக்கும்.

Lord Murugan (Photo Credit: Wikipedia)

மார்ச் 24, சென்னை (Chennai): தமிழ் கடவுள் முருகனுக்கு சிறப்பு விரதம் இருக்கும் தினமாக அனுசரிக்கப்படும் பங்குனி உத்திரம் (Panguni Uthiram), தமிழ் மாதத்தின் இறுதியில் புதிய வருடத்தின் பிறப்புக்கு முன்பு வெகு விமர்சையாக சிறப்பிக்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றாகும். 12 தமிழ் மாதங்களில் முக்கியமான மாதமாக கருதப்படும் பங்குனியில், முருகனுக்கு சிறப்பு தினமாக பங்குனி உத்திரம் கருதப்படுகிறது.

தெய்வங்களின் திருமண நாள்: பங்குனி உத்திரத்தன்று உலகெங்கும் உள்ள முருகன் கோவில்களில் கொண்டாட்டங்கள் கலைக்கட்டும். புராணங்களின்படி, இந்நாளிலேயே சிவன் பார்வதியையும், ராமர் சீதையையும், முருகர் தெய்வானையையும், திருவரங்கநாதர் ஆண்டாளையும் திருமணம் செய்தனர் என்பது ஐதீகம். இவ்வளவு சிறப்பு மிக்க பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்தால், விரைவில் திருமணம் கைகூடும் என்றும் நம்பப்படுகிறது.

பண்டிகை தொங்கி முடியும் நேரம்: முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் பங்குனி உத்திரத்தன்று (இன்று) தேரோட்டம், திருவிழா ஆகியவை சிறப்புடன் நடைபெறும். உத்திரம் நட்சத்திரம் ஆரம்பிக்கும் மார்ச் 24ஆம் தேதி காலை 07:34 மணி முதல் மார்ச் 25ஆம் தேதி காலை 10:30 மணி வரை கோவில்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனையுடன் பக்தர்களின் மனமுறுகிய வழிபாடுகள் நடக்கும்.

இந்த பங்குனி உத்திரத்தை உங்களின் குடும்பத்துடன் கோவில்களில் கொண்டாடி இறைவனின் அருள் பெற அனைவருக்கும் அன்பான பங்குனி உத்திர வாழ்த்துக்களை எமது லேட்டஸ்ட்லி நிறுவனம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

பங்குனி உத்திரம் பிறந்த வரலாறு காணொளி வடிவில் உங்களுக்காக: