Karuppu Movie Diwali Poster (Photo Credit : @DreamWarriorpic X)

அக்டோபர் 20, சென்னை (Cinema News Tamil): நகைச்சுவை நடிகராக வலம் வந்த ஆர்.ஜே.பாலாஜி மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டு முன்னணி இயக்குனராகவும் தற்போது அடையாளம் பெற்றுள்ளார். இந்த படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவுடன் கைகோர்த்த ஆர்.ஜே.பாலாஜி கருப்பு என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சூர்யா, திரிஷா, யோகிபாபு, ஷிவாதா உட்பட பலரும் நடித்துள்ளனர். இசையமைப்பு பணிகளை இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மேற்கொண்டுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வழங்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஜி.கே விஷ்ணுவும், எடிட்டிங் பணிகளை கலைவாணனும் மேற்கொண்டுள்ளனர். Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் 2வது வாரத்தில் வெளியேறியது யார்?.. எஸ்கேப் ஆன அரோரா.. லீக்கான தகவல்.!

தீபாவளி ஸ்பெஷல் போஸ்டர்:

இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 50வது பிறந்தநாளுக்கு கருப்பு படத்தின் பிரத்தியேக டீசரையும் படக்குழு வெளியிட்டு இருந்தது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதியாக நிலையில், பொங்கலுக்கு படம் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் God Mode லிரிக் வீடியோவும் இன்று வெளியாகும் என தெரிவித்துள்ளது

நடிகர் சூர்யாவின் கருப்பு பட போஸ்டர் (Karuppu Movie Poster):