Ayodhya Airport: அயோத்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வால்மீகி பெயர்; பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.. விபரம் இதோ.!

ஸ்ரீ ராமர் பக்தர்கள் அயோத்தி நகருக்கு எளிதில் வந்து செல்லும் வகையில், அயோத்தி ராமர் கோவிலில் இருந்து 7 கி.மீ தொலைவில் பிரம்மாண்டமாக சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Ayodhya Airport (Photo Credit: @ANIDigital / @IANS X)

டிசம்பர் 29, அயோத்தி (Uttar Pradesh): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் (Ayodhya) அமைக்கப்பட்டு வரும் ஸ்ரீ ராமர் கோவில் (Sri Ram Temple) சிலை பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழா வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி 2024 அன்று நடைபெறுகிறது. பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய அளவில் பல முக்கிய பிரபலங்கள் நேரில் வரவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஸ்ரீ ராம பக்தர்களும் அயோத்தி சென்று குவிவார்கள் என்பதால், அங்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. மக்களின் விரைந்த பயணத்தை உறுதி செய்ய, சர்வதேச அளவிலான சுற்றுலாப் பயணிகளும் அயோத்தி நகரை எளிதில் வந்து செல்ல, பிரம்மாண்டமான சர்வதேச விமான நிலையமும் அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் பெயர்: அந்த விமான நிலையத்திற்கு ராமாயணத்தை எழுதிய வால்மீகிக்கு பெருமை சேர்க்கும் பொருட்டு, 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தி தாம் (Maharishi Valmiki International Airport Ayodhya Dham)' என்று அயோத்தி விமான நிலையத்திற்கு பெயர் சூட்டப்படவுள்ளது. முன்னதாக மரியாதை புருஷோத்தம் ஸ்ரீ ராம் அயோத்தி சர்வதேச விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டு இருந்த நிலையில், தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Ronaldo Workout: தீவிர உடற்பயிற்சியில் மும்மரமாக ரொனால்டோ; லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.! 

விமான நிலைய திறப்பும், அம்ரித் இரயில் சேவை தொடக்கமும்: நாளை விமான நிலையத்தின் திறப்பு விழா பிரதமர் மோடி முன்னிலையில் நடத்தப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, டெல்லியில் இருந்து அயோத்தி நகருக்கு அம்ரித் விரைவு இரயில் சேவையும் தொடங்கப்படுகிறது. நாடெங்கும் இருந்து பக்தர்கள் அயோத்தி செல்வதற்கு ஆர்எஸ்எஸ் சார்பிலும் பிரமாண்டமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் இரண்டாம் தேதி முதல் 22 நாட்களுக்குள் அயோத்திலுள்ள ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வந்து குவிவார்கள் என்பதால் சிறப்பு இரயில், விமான சேவைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து 29 ஆயிரம் கிராமத்தைச் சார்ந்த பக்தர்கள், அயோத்தி செல்லவிருக்கும் தகவலும் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையம்: அயோத்தி சர்வதேச விமான நிலையம் (Ayodhya Airport Infrastructre), முற்றிலும் சர்வதேச தரத்துடன் ரூ.1,450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. 821 ஏக்கர் நிலத்தில், 3 முனையங்களாக 6,500 சதுர மீட்டர் பரப்பில் வளாகம், ஆண்டுக்கு 10 இலட்சம் பயணிகளை கையாளும் வகையில் விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்றாவது முனைய வளாகம் 50,000 ச.மீ பரப்பில், 60 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. விமான நிலையத்தில் இருந்து அயோத்தி நகரம் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது அம்மாநிலத்தின் 10வது விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.