Valentine's Day 2024: காதலர் தினம்.. இதன் வரலாறு தெரியுமா.? இன்றைக்கு என்ன நிறம் ஆடை போட போறீங்க..!

காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Valentine's Day (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 14, சென்னை (Chennai): இந்த உலகத்திலேயே அழகானது என்றால் அது காதல் (Love) தான். ஒரு மனிதனுக்குள் காதல் வந்தால் எல்லாமே அழகாக தெரியும். உண்மையில் அதைவிட அழகு என்ன இருக்கு..!

இப்படிப்பட்ட காதலை கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இது அன்பானவர்களிடம் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு நாளாகும்.

வரலாறு: காதலர் தினத்தின் வரலாறு பிப்ரவரி நடுப்பகுதியில் நடைபெறும் ரோமானிய திருவிழாவான லூபர்காலியாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. வசந்த காலத்தின் தொடக்கத்தில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் ஆண்களுடன் பெண்களை லாட்டரி மூலம் ஜோடியாக்குவது வழக்கம்.

5 ஆம் நூற்றாண்டின் இறுதியில், போப் கெலாசியஸ் I, இந்த கொண்டாட்டத்தை புனித காதலர் தினமாக மாற்றி அறிவித்ததாக நம்பப்படுகிறது. இருப்பினும், 14 ஆம் நூற்றாண்டு வரை காதலர் தினம் காதல் தினமாக கொண்டாடப்படவில்லை. மறுபுறம், மற்ற சில பிரபலமான புராணக்கதைகள் இந்த நாள் ஒரு பிஷப்பாக இருந்த டெர்னியின் புனித வாலண்டைன் நினைவாக பெயரிடப்பட்டது என்று கூறுகின்றன.

மேலும் இந்நாளில் தேர்வு செய்யும் ஒவ்வொரு நிற ஆடையும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கொண்டுள்ளது. அந்த நிறத்தைக் கொண்டு உங்களின் உறவு நிலை அல்லது உணர்ச்சிகள் என்னவென்பதை மற்றவருக்கு பேசாமலேயே தெரியப்படுத்தலாம். Women Raped by Rowdy: கண்ணீருடன் உதவிகேட்ட பெண்ணை கற்பழித்த ரௌடி; திருச்சியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!

சிவப்பு - காதலில்

நீங்கள் ஏற்கனவே காதலிக்கிறீர்கள் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த சிவப்பு நிறத்தை அணியுங்கள்.

மஞ்சள் - பிரேக் அப்

உங்களுக்கு சமீபத்தில் தான் பிரேக் அப் ஆகியிருந்தால், காதலர் தினத்தன்று மஞ்சள் நிற ஆடையை தேர்வு செய்து அணியலாம்.

ஆரஞ்சு - ப்ரோபோஸ் செய்ய போகிறேன்

ஆரஞ்சு நிறமானது நீங்கள் விரும்பும் ஒருவருக்கு நீங்கள் ப்ரோபோஸ் செய்யப் போகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

நீலம் - காதல் செய்ய ரெடி

இந்த காதலர் தினத்தில் நீங்கள் காதல் செய்ய தயாராக உள்ளீர்கள் என்பதை நீலம் சமிக்ஞை செய்கிறது. நீங்கள் ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்திருந்தால் அல்லது திருமணமானவராக இருந்தால், நீலத்தைத் தவிர்க்கவும்.

பிங்க் - ப்ரோபோஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டது

பிங்க் நிற ஆடையை காதலர் தினத்தன்று அணியப் போகிறீர்களா? உங்களிடம் யாரேனும் ப்ரோபோஸ் செய்துள்ளார்களா? அவர்களிடம் உங்களின் சம்மதத்தை வெளிப்படுத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் பிங்க் நிற ஆடையை அணியுங்கள்.

கருப்பு - காதல் நிராகரிக்கப்பட்டது

இந்த நிற ஆடையை காதலர் தினத்தன்று அணிந்தால், உங்களிடம் யாரேனும் ப்ரோபோஸ் செய்திருந்தால், அவர்களின் முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று அர்த்தம்.

பச்சை - பதிலுக்காக காத்திருப்பது

பச்சை காத்திருப்பைக் குறிக்கிறது. நீங்கள் காதலை முன்மொழிந்து இன்னும் பதிலுக்காகக் காத்திருந்தால், நீங்கள் பொறுமையாகக் காத்திருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க பச்சை நிற ஆடையை அணியுங்கள்.

வெள்ளை - ஆள் உள்ளது

ஏற்கனவே காதலித்து வந்தால் அல்லது நிச்சயதார்த்தம் ஆகியிருந்தால், வெள்ளை நிற ஆடையை அணியலாம்.

ஊதா அல்லது சாம்பல் - ஆர்வம் இல்லை

உங்களுக்கு காதலில் ஆர்வம் இல்லை என்பதை தெரியப்படுத்த விரும்பினால், ஊதா அல்லது கிரே நிற ஆடைகளை தேர்வு செய்து அணியலாம்.

பழுப்பு - உடைந்த இதயங்கள்

இறுதியாக, பழுப்பு உடைந்த இதயத்தை குறிக்கிறது. நீங்கள் காதல் தோல்வி துயரத்தில் நீண்ட நாளாக இருந்தால் பழுப்பு நிற ஆடைகளை தேர்வு செய்து அணியலாம்.