World Hypertension Day 2024: உலக உயர் இரத்த அழுத்தம் தினம்... உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகள்..!
இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் மே 17 ஆம் தேதி உயர் இரத்த அழுத்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
மே 17, சென்னை (Chennai): உலக சுகாதார அமைப்பின் (WHO) சார்பாக 2006-ம் ஆண்டு முதல் மே 17-ம் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினமாக (World Hypertension Day) அனுசரிக்கப்படுகிறது. உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் (High blood pressure) என்பது உலகையே அச்சுறுத்தும் நோயாக உள்ளது. அதைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், உயிருக்கே அச்சுறுத்தலாகிவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
அறிகுறிகள்: உயர் ரத்த அழுத்தத்திற்கு பிரத்யேகமான அறிகுறிகள் கிடையாது. காலையில் எழுந்து கொள்ளும் போதே உங்களுக்கு தலைவலி இருந்தால் அது உயர் ரத்த அழுத்தத்திற்கான ஒரு அறிகுறி ஆகும். ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் பொழுது பொதுவாகவே மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். மேலும் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது உடலுக்கு தேவையான ரத்தம் மற்றும் ஆக்ஸிஜனின் சப்ளை நிச்சயமாக தடைப்படும். சில நேரங்களில் இதனால் இதயம் அதிவேகமாக வழக்கத்தை விட வேகமாக துடிக்கும். மூக்கிலிருந்து ரத்தம் வடிவது மற்றும் சிறுநீரில் ரத்தம் வடிவது உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகும். Vlogger Sexual Harassment Case: திருச்சூர் பூரம் திருவிழாவில் அமெரிக்க தம்பதிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது; காவல்துறை அதிரடி.!
கட்டுப்படுத்துவதற்கான வழிகள்: பொதுவாக இரத்த அழுத்தம் என்பது குறைந்தபட்ச அளவில் 80 mmHg என்றும் அதிகபட்ச அளவாக 120 mmHg என்றும் இருப்பது சாதாரணமானதாக கருதப்படுகிறது. உயர் இரத்த அழுத்தத்துக்கு முற்றிலும் குணப்படுத்த தற்போது வரை சிகிச்சை இல்லை. எனினும் நிலைமையை நிர்வகிக்க வழிமுறைகள் உண்டு. அவைகளாவன, மது அருந்துவை குறைப்பது, ஆரோக்கியமன உணவை உண்ணுதல், உடற்பயிற்சியால் மன அழுத்தம் நிர்வகித்தல், புகைப்பிடிப்பதை விட்டுவிடுதல், மிதமான எடையை பராமரித்தல் போன்றவைகள் ஆகும்.