Director Seenu Ramasamy (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 12, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி (Director Seenu Ramasamy). அதன்பிறகு தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில், ஜீ.வி. பிரகாஷை வைத்து இடிமுழக்கம் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். HBD Super Star: "நெருப்புப் பேரோட.. நீ கொடுத்த ஸ்டாரோட.. இன்னைக்கும்.. ராஜா நான்.." தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் இன்று..! 

17 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி:

இந்நிலையில், தனது மனைவியை பிரிந்து வாழப்போவதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் சமூகவலைதளப் பதிவில், 'நானும் எனது மனைவி ஜி.எஸ்.தர்ஷனாவும் எங்களது 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று, அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும், அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும், எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் பாதிக்காது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார். இந்த விவாகரத்துக்கு (Divorce) உதவும்படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும், அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துகள் எங்களுக்கு ஊக்கம்' என்று பதிவிட்டுள்ளார்.

சீனு ராமசாமியின் விவாகரத்து தொடர்பான அறிவிப்பு: