MS Dhoni Rides Bike (Photo Credit: @x_vault_ X)

டிசம்பர் 09, சென்னை (Sports News): இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான எம்எஸ் தோனி (MS Dhoni), வருகின்ற 2025 ஐபிஎல்-யில் சிஎஸ்கே அணிக்காக அன்கேப்டு வீரராக விளையாடவுள்ளார். 43 வயதான எம்எஸ் தோனி இன்னும் அவரது ரசிகர்களுக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். IND Vs AUS 2nd Test: 3 ஓவரில் இந்தியாவை வெற்றிகண்ட ஆஸ்திரேலியா; இந்தியா - ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் தொடரில் ஆஸி., ஆருட வெற்றி.!

இந்நிலையில்,  தோனி அவரது பைக்கில் (Bike Ride) சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது, அவருக்கு அருகில் பைக்கில் சென்ற நபரை பார்த்து 'ஏன் ஹெல்மெட் அணியவில்லை, ஹெல்மெட் எங்கே?' என்று கேட்பதுபோல் சைகையில் பேசினார். இதனை அந்த நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இது எங்கே எடுக்கப்பட்டது என்பது குறித்த முழு தகவல் கிடைக்கப்பெறவில்லை.

வீடியோ இதோ: