Snake on Helmet: தலைக்கவசத்தில் பதுங்கியிருந்த குட்டி நாகம்; நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்.! வைரல் வீடியோ.!

குளிர்காலத்தில் கதகதப்பான இடங்களை தேடும் பாம்புகள், வெயில் காலங்களில் நிழல்களை தேடியும் மனிதர்களின் வாழ்விடத்திற்கு வருகின்றன.

Snake in Helmat (Photo Credit: @imvivekgupta X)

ஜனவரி 29, மும்பை (Trending Video): பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். இந்த பழமொழி ஒவ்வொரு தனி நபருக்கும் பொருந்தும். பாம்பை கண்டாலே நடுநடுங்கி ஓட்டம் பிடிப்போரும் இங்கு இருக்கிறார்கள். ஒரு சிலர் அதனை லாவகமாக கையாண்டு பயம் இல்லாமல் கையால் தொட்டு பார்ப்பார்கள். மழைக்காலங்களில் பெரும்பாலும் தனது வாழ்விடங்களை இழக்கும் பாம்புகள், இடம்பெயர்ந்து மனிதர்கள் வசித்து வரும் இடங்களை நோக்கி குடிபெயரும். கதகதப்பான சூழ்நிலை உள்ள பகுதியில் அது தங்கிக் கொள்ளும் என்பதாலேயே பெரும்பாலும் வெளியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றவற்றின் இடுக்குகளில் பாம்புகள் தங்குவது உண்டு. Infosys Techie Killed: காதல் தகராறில் காதலி சுட்டுக்கொலை; ஆசையாய் பார்க்க வந்து நடந்த பயங்கரம்.! 

கவனமாக இருக்க வேண்டும் மக்களே: ஒரு சில நேரம் நாம் மறதியுடன் தலைக்கவசம் போன்றவற்றை வெளியே வைத்துவிட்டு சென்றாலும், அவற்றிலும் பாம்புகள் ஏறி தங்கிக் கொள்ளும். அந்த வகையிலான ஒரு அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. நல்ல வேலையாக அதனை யாரும் அணியவில்லை என்பதால் விபரீதம் தவிர்க்கப்பட்டது. வெயில் காலத்தில் நிழல்களுக்காக பாம்புகள் தங்கும் இடத்தை தேடும் என்பதால், மலைச்சரகம் மற்றும் வயல்வெளி பகுதிகளில் இருப்பவர் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல, ஷூ போன்ற காலணிகளை பயன்படுத்துவதற்கு முன்பும் அதனை சோதித்துக்கொள்வது நல்லது. அந்த வீடியோ உங்களின் பார்வைக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது. வீடியோ குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.