Woman With Water Allergy: தண்ணீரைத் தொட்டால் அலர்ஜி.. 10 வருடங்களாக குளிக்காமலிருக்கும் இளம்பெண்..!
அமெரிக்காவில் 22 வயது இளம்பெண்ணுக்கு தண்ணீர் அலர்ஜி உள்ளதால் கடந்த 10 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 06, தென் கரோலினா (South Carolina): அமெரிக்காவின் தென் கரோலினா (South Carolina) மாகாணத்தைச் சேர்ந்தவர் லோரன் மான்டெஃபுஸ்கோ (Loren Montefusco). இவர்க்கு வயது 22. இவர்க்கு அக்குவாஜெனிக் யூர்டிகேரியாவால் (aquagenic urticaria) பாதிக்கப்பட்டுள்ளதாக, அதாவது தண்ணீர் ஒவ்வாமை (Water Allergy) இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. New Married Couple Died in Accident: திருமணமான ஒரே வாரத்தில் நடந்த சோகம்; புதுமண தம்பதி, பெற்றோர் உட்பட 5 பேர் பரிதாப பலி..!
இதனால் மான்டெஃபுஸ்கோ குளிக்கும் போது அல்லது தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்க்கு கடுமையான அரிப்பு ஏற்படுகிறது, இது ஒரு மணி நேரம் வரை நீடிக்குமாம். இதனால் அவர் கடந்த 10 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம். உலகம் முழுவதுமே தோராயமாக 100 – 250 நபர்களுக்கு இந்த பாதிப்பு இருக்கிறது