Gobi Manchurian Banned: கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு சுகாதாரத்துறை அதிரடி தடை; காரணம் என்ன?..! விபரம் இதோ.!

தெருவோரத்தில் கிடைக்கும் உணவுகளால் உடல்நலனுக்கு எப்போதும் தீங்குகள் ஏற்படும். உணவில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் பல உபாதைகளுக்கு வழிவகை செய்யும்.

Gobi Manchurian (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 06, பானாஜி (Panaji): இந்தியாவில் பெருமளவு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் கோவா மாநிலத்தில் சுற்றுலா சார்ந்த வருவாய் என்பது அதிகம். உள்நாட்டு சுற்றுலா பயணிகள் முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரை பலரும் கோவாவுக்கு வந்து செல்வார்கள். இவர்களுக்கு சாப்பிட தெருவோர உணவுகள் முதல் கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரதான உணவுகள் கிடைக்கும்.

செயற்கை நிறமிகளால் சுகாதார பிரச்சனை: இந்நிலையில், கோவாவில் உள்ள மபோசா நகரில் கோபி மஞ்சூரியன் (Gobi Manchurian) தடை செய்யப்பட்டுள்ளது. செயற்கையாக சேர்க்கப்படும் நிறமிகள், சுகாதாரம் சார்ந்த பிரச்சனை காரணமாக கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு உள்ளூர் சுகாதாரத்துறை தடையை விதித்து இருக்கிறது. Sister Rape & Kill: ஆபாச படங்கள் பார்த்து சிறுமி பலாத்காரம், கொலை.. 19 வயது அண்ணனால் நடந்த பயங்கரம்.! 

தரமற்ற தயரிப்புகள், வேதிப்பொருட்கள் சேர்க்கை: சாலையோர உணவகம் முதல் பிரதான உணவகங்கள் வரையில் விற்பனை செய்யப்படும் கோபி மஞ்சூரியனில் (Cauliflower Manchurian) நிறம் மற்றும் சுவைக்காக செயற்கை வர்ணம், சாஸ், சோடா உப்பு போன்றவையும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

சுகாதாரத்துறை அதிரடி தடை: இதனால் பல உடல்நல பிரச்சனைகளை சுற்றுலா பயணிகள் எதிர்கொள்வதை தொடர்ந்து, சிலர் தங்களின் புகாரையும் முன்வைத்தனர். உணவு பாதுகாப்புத்துறை சார்பில் முன்னதாகவே தடை செய்யப்பட்டுள்ள சாஸ் உபயோகம் செய்ய கூடாது, நிறமிகளை அதிகம் உபயோகம் செய்ய கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவை யாராலும் கடைபிடிக்கப்படவில்லை. இதனால் சுகாதாரத்துறை சார்பில் காலிப்ளவர் வறுவலுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

துரித உணவுகளில் கவனம் தேவை: சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் துரித உணவுகள் எப்போதும் சுவைக்காக நிறமிகள், வேதிப்பொருட்கள், வாசனை உப்புகள் போன்றவை சேர்க்கப்படும். இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக என அதிகம் சாப்பிட்டாலும், ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிட்டாலும், அதில் உள்ள வேதிப்பொருட்கள் வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதையை ஏற்படுத்தவல்லவை. தரமற்ற எண்ணெய் காரணமாக தேவையற்ற தலைவலி போன்ற பிரச்சனையும் ஏற்படும். சிலநேரம் நிறமிகள் அதிக சேர்க்கை காரணமாக செரிமான கோளாறுகள் ஏற்பட்டு, வாந்தி நிறமிகள் நிறத்தில் வெளியேறும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement