பிப்ரவரி 06, காஸ்கஞ்ச் (Uttar Pradesh News): தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துவிட்ட இன்றைய காலத்தில், நாம் அதனை வெவ்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகிறோம். வளர்ச்சிக்காக நாம் பயன்படுத்தவேண்டிய விஷயத்தினை தவறிய வழியில் பயன்படுத்தும் நபர்களால் எப்போதும் விபரீதங்கள் ஏற்படுவது உண்டு. அவ்வாறான பெருந்துயரம் தற்போது நடந்துள்ளது.
ஆபாச படத்திற்கு அடிமையான 19 வயது இளைஞர்: உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காஸ்கஞ்ச் மாவட்டம், பாட்டியாலி, நாக்ளா கிஷோரி பகுதியில் வசித்து வரும் நபர் சஞ்சு (வயது 19). இவர் எந்நேரமும் செல்போனை உபயோகம் செய்துகொண்டு இருந்து வந்துள்ளார். இதனால் (Kasganj Sister Rape) நாளடைவில் சேர்க்கை சரியில்லாமல் ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்தை கொண்டதாகவும் தெரியவருகிறது.
தங்கையை கற்பழித்த காமுக சகோதரன்: இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 19 வயதுடைய இளைஞர் சஞ்சு, தனது செல்போனில் ஆபாச படங்களை பார்த்து இருக்கிறார். பின் வீட்டில் இருந்த தனது சொந்த தங்கையை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். துயரத்தை அனுபவித்த சிறுமி, தனது தாயிடம் முறையிடுவதாக சகோதரரரை கண்டித்து இருக்கிறார். FIFA World Cup 2026 Schedule: 2026 உலகக் கோப்பை கால்பந்து… தேதி மற்றும் மைதானங்களின் பட்டியல் வெளியீடு..!
நகங்களால் கீறி பதைபதைக்க வைக்கும் சம்பவம்: இதனால் பதறிப்போன சஞ்சு, தனது சொந்த தங்கையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பலாத்காரத்தின்போது சிறுமியின் கழுத்து மற்றும் முகத்தில் நடத்தலும் கீறப்பட்டு இருக்கிறது. கொலை செய்யப்பட்டபோது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை சடலமாகவே மீட்டனர். அவரது சகோதரர் அருகில், சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதியின் அடையாளத்துடன் அவர் வீழ்ந்து கிடந்தார்.
கயவன் கைது: பின் இதுதொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமியின் சகோதரர் சஞ்சுவை கைது செய்தனர். அவரிடம் நடத்த விசாரணையில் மேற்கூறிய அதிர்ச்சி தகவலும் அம்பலமானது. Corona Sleeping Issue: லேசான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு உறக்கமின்மை பிரச்சனை; ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை.!
பெற்றோர்களே கவனமாக இருங்கள்: இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டில் குழந்தைகள் செல்போன் உபயோகம் செய்யும் பழக்கம் கொண்டு இருந்தால், அவர்கள் எதற்காக அதனை பயன்படுத்துகின்றனர் என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த செய்தித்தொகுப்பு உணர்த்துகிறது.