MSD Celebrate Vinayagar Chathurthi: மும்பையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்ந்த தோனி..! வைரல் வீடியோ உள்ளே.!
எப்போதும் மைதானத்தில் சுறுசுறுப்புடன் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் தோனி, துல்லியமான அனுபவத்தை கொண்டிருப்பதால் அவரின் இலக்கு பெரும்பாலும் தப்பியது இல்லை.
செப்டம்பர் 21, மும்பை (Social Viral): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி (MS Dhoni), சர்வதேச அளவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, ஐபிஎல் (IPL) போட்டிகளில் சென்னை அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.
இருசக்கரம் & நான்கு சக்கரம் கொண்ட வாகனங்களின் பிரியரான தோனி, தனது இல்லத்தில் விதவிதமான பல்வேறு வாகனங்களை வாங்கி வைத்துள்ளார். கிரிக்கெட்டில் பேட்டிங், விக்கெட் கீப்பிங் பிரிவில் தலைசிறந்த வீரராக கருதப்படும் தோனி, மின்னல்வேக செயல்பாட்டுக்கு புகழ்பெற்றவர். Indian Women Cricket Team: ஆசிய விளையாட்டுகள் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணி; கொண்டாட்டத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.!
எப்போதும் மைதானத்தில் சுறுசுறுப்புடன் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் தோனி, துல்லியமான அனுபவத்தை கொண்டிருப்பதால் அவரின் இலக்கு பெரும்பாலும் தப்பியது இல்லை. நேற்று ராஞ்சியில் இருந்து தோனி மும்பைக்கு வந்தடைந்தார். அவர் மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
இந்நிலையில், தோனி மும்பையில் வைத்து விநாயகர் சதுர்த்தியை சிறப்பித்தார். கடந்த செப். 19ம் தேதி இந்திய அளவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களைகட்டியது. வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி என்பது கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். தல தோனி தற்போது விநாயகர் சதுர்த்தியை மும்பையில் சிறப்பித்தார்.