செப்டம்பர் 21, சீனா (Cricket News): ஆசிய விளையாட்டுகள் 2023ல் களமிறங்கியுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, மலேஷிய அணியை எதிர்கொண்டு நேற்று விளையாடி வந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் சார்பில் களமிறங்கிய சைபில் வர்மா 39 பந்துகளில் 67 ரன்களை குவித்தார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜெமியா 29 பந்துகளில் 47 ரன்னும், ரிச்சா கோஷ் 7 பந்துகளில் 21 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். மழையின் காரணமாக ஆட்டம் தடைபட்ட நிலையில், போட்டி இரத்து செய்யப்பட்டு இறுதியில் அறிவிக்கப்பட்டது. இந்திய அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. TMB Bank Rs.9,000 Crore INR: ரூ.9000 கோடியை ஓட்டுனரின் வங்கி கணக்குக்கு மாற்றி அனுப்பிய தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க்; இன்ப அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்தவருக்கு நொடியில் ஷாக்.!
இதனையடுத்து, இந்திய பெண்கள் அணி ஐசிசி தரவரிசை புள்ளிபட்டியலின்படி உச்சத்தில் இருப்பதால், ஆசிய விளையாட்டுப்போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய பெண்கள் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் இந்திய கிரிக்கெட் பெண்கள் அணி வங்காளதேசத்தில் தனது சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, நடைபெற்ற அடுத்தடுத்த ஆட்டங்களில் கிடைத்த வெற்றியால் இன்று தகுதிச்சுற்றுக்கு அணி முன்னேறி இருக்கிறது.
இந்த போட்டிகள் சீனாவில் உள்ள Zhejiang மாகாணம், Hangzhou நகரில் அமைந்துள்ள ZJUT Cricket Field மைதானத்தில் வைத்து நடைபெற்றது. அரையிறுதி போட்டி வங்காளதேச அணியுடன் செப். 24 அன்று நடைபெறும்.
ஸ்மிர்தி மந்தனா வழிநடத்தும் இந்திய அணியில் ஷைபீ வர்மா, ஜெமியா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், அமஞ்சோட் கவுர், தேவிகா வைத்யா, பூஜா வஸ்திரக்கர், டிடாஸ் சாது, ராஜேஸ்வ்வாரி கெய்க்வாட், மின்னு மணி, கனிகா அஜா, உமா செட்ரி, அனுஷ்கா ப்ரெடி ஆகியோர் இருக்கின்றனர்.
Shafali Verma show at the Asian games. The Indian opener scored 67 in just 39 deliveries.#AsianGames2023 #INDvMAL #QFpic.twitter.com/CNLzhieTeZ
— Cricket Queens (@cricketqueens) September 21, 2023