Customs Seized Gold Bars:ரூ.83 இலட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த பயணி கைது: தாய்லாந்தில் இருந்து வந்தரவரை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்.!
தங்கக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் எவ்வுளவு புதிய முயற்சியை மேற்கொண்டாலும், அதனை சுங்கத்துறையினர் தொழில்நுட்ப உதவியுடன் கைப்பற்றி திறம்பட பணியாற்றி வருகின்றனர்.
டிசம்பர் 13, புதுடெல்லி (New Delhi): வெளிநாடுகளுக்கு கல்வி, வேலை மற்றும் சுற்றுலாவுக்கு சென்றுவிட்டு, மீண்டும் தாயகம் திரும்பும் இந்தியர்கள் சில நேரம் தங்கம் உட்பட வெளிநாட்டு பொருட்களை வாங்கி வருவது வழக்கம். இவற்றுக்கு சுங்கவரி (Customs Tax) செலுத்தினால், அதனை நம்முடன் எடுத்துச்செல்ல உரிய அனுமதி வழங்கப்படும்.
தொடரும் திருட்டு கடத்தல் சம்பவங்கள்: ஆனால், உள்நாட்டில் அரசுக்கு கிடைக்கும் வருவாயை குறைக்கும்பொருட்டு, சில நேரம் கடத்தல் கும்பல் திரைமறைவில் தங்கம் (Gold Sumuggling), எலக்ட்ரானிக் பொருட்கள், சிகிரெட் போன்றவற்றை கடத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதனால் சர்வதேச விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் கூடுதல் பாதுகாப்புடன் செயல்பட்டு கேடி கும்பலை கண்டறிவார்கள். Hero Cycles on Walmart: வால்மார்ட்டில் காட்சிப்படுத்தப்பட்ட ஹீரோ நிறுவனத்தின் சைக்கிள்: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அசத்தல்.!
திரைப்பட பாணியில் தொடர்ச்சி: போதைப்பொருட்களும் சில நேரம் கிலோ கணக்கில் கடத்தி வரப்படும் நிகழ்வுகளும் நடக்கின்றன. திரைப்பட பாணியில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் அதிகாரிகளை வியக்கவைக்கும். இந்நிலையில், டெல்லிக்கு தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் இந்தியர் தாயகம் வந்துள்ளார்.
வாட்டர் ஹீட்டரில் தங்கம்: அவரின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவர் கொண்டு வந்த பொருட்களை சோதனையிட்ட அதிகாரிகள், கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.83 இலட்சம் மதிப்பிலான 1.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். வாட்டர் ஹீட்டர் சாதனத்தில் தங்கம் கட்டி போன்று கொண்டு வறுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.