செப்டம்பர் 23, திருவனந்தபுரம் (Cinema News): கேரளாவில் பிரபலமான நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் வீட்டில், இன்று காலை சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அதன்படி, கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள நடிகர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 'ஆபரேஷன் நும்கோர்' (Operation Numkhor) என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். Operation Numkhor: ஆபரேஷன் நும்கூர்.. நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிரடி சோதனை.!
கார்கள் பறிமுதல்:
பூடான் நாட்டின் ராணுவ உயரக வாகனங்களை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து இமாச்சலப் பிரதேசத்தில் பதிவு செய்து, சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில், அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர். இதில், ஒரு வாகனம் ரூ.5 லட்சம் எனில், அதனை ரூ.40 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. வாகனத்தின் மதிப்பு மற்றும் விற்பனை தொகையை மறைத்து மத்திய அரசுக்கு பண இழப்பு ஏற்படுத்தியதாக 'ஆபரேஷன் நும்கோர்' என்ற பெயரில் பல்வேறு இடங்களில் இன்று காலை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பிரபல நடிகர் துல்கர் சல்மானின் 2 கார்களை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இரண்டு கார்கள் உட்பட 7 இடங்களில் மொத்தம் 11 கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.