Customs Raids Prithviraj and Dulquer's House (Photo Credit : FB)

செப்டம்பர் 23, கொச்சி (Cinema News): கேரள திரையுலகில் பிரபலமான நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ். இவர்கள் தமிழிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தனர். இதனிடையே இன்று சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென நடிகர்களின் வீடுகளில் (Customs Raids Prithviraj and Dulquer's House) சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள நடிகர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Kantara Chapter 1 Tamil Trailer: தர்மத்தை காக்க பஞ்சுருளி தெய்வம் அவதரித்தது எப்படி?.. காந்தாரா சாப்டர் 1 படத்தின் அனல்பறக்கும் டிரெய்லர் காட்சிகள்.!

ஆபரேஷன் நும்கூர் தீவிரம் :

பூடான் நாட்டின் ராணுவ உயரக வாகனங்களை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து இமாச்சலப் பிரதேசத்துக்கு கொண்டு வந்த சிலர் நடிகர்களை குறி வைத்து விற்பனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் வெளியாகிதால் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தனர். வாகனத்தின் மதிப்பு மற்றும் விற்பனை தொகையை மறைத்து மத்திய அரசுக்கு பண இழப்பு ஏற்படுத்தியதாக 'ஆபரேஷன் நும்கூர்' என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

கேரள நடிகர்கள் வீட்டில் சோதனை :

இந்த நிலையில் சொகுசு கார்களை வரி கட்டாமல் பூடான் வழியாக இறக்குமதி செய்ய முயற்சிப்பதாக எழுந்த புகாரின் பேரில் நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ்க்கு சொந்தமான 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளத் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சந்தேகத்திற்கிடமான வகையில் எந்த வித வாகனங்களும் பறிமுதல் செய்யப்படாத நிலையில், விரைவில் வாகனங்களை கைப்பற்ற மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது.