Earthquake on Bay of Bengal: வங்காள விரிகுடா கடலில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நேபாளத்தில் ரிக்டர் அளவுகோளில் 6.4 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 157 பேரை பலிவாங்கியது.
நவம்பர் 07, வங்காளவிரிகுடா (Social Viral): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிதாகர்க் மாவட்டத்தில், நேற்று திடீரென ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகள் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை.
நேபாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரிக்டர் அளவுகோளில் 6.4 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, 157 பேரின் உயிரை பறித்தது. 160 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். Uttar Pradesh Shocker: மனைவியை நண்பர்களுக்கு விருந்தளித்து, விபசாரியாக்க முயன்ற கணவர் கூட்டாளிகளுடன் கைது.. முத்தலாக் சொல்லி மிரட்டிய பயங்கரம்.!
இமயமலைத்தொடர்களில் உள்ள நேபாளம் மற்றும் இந்திய மாநிலங்களில் நிலநடுக்கம் தற்போது உணரப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், 2 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் உயிரை பறித்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை 05:32 மணி அளவில் வங்காளவிரிகுடா கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலவியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலுக்குள் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.