நவம்பர் 07, பிளிம்பிட் (Uttar Pradesh News): உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிம்பிள்ட் மாவட்டம் (Pilibhit, Uttar Pradesh), சுந்தர்கி கோட்வாலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரி ஓட்டுநர் வசித்து வருகிறார்.
இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமண நடைபெற்று முடிந்துள்ளது. தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். லாரி ஓட்டுநரான கணவர், மதுபோதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி, 2 ஆண்களுடன் வீட்டிற்கு வந்த கணவர், அவர்களிடமிருந்து ரூபாய் 2500 பணம் பெற்றுக் கொண்டு பெண்ணை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ய அனுமதித்துள்ளார். Mosquito Disease: ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய தலைவலியாகப்போகும் கொசு நோய்கள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.!
பெண் தடுக்க முயற்சித்தும் பலனில்லை. எதிர்ப்பு தெரிவித்தபோது, முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்திடுவேன் என கொடூரத்தை அரங்கேற்ற அனுமதி செய்துள்ளார்.
இதனிடையே, சமீபத்தில் மீண்டும் அதே இரண்டு நபர்களுடன் கணவர் வந்த நிலையில், ரூபாய் 5000 பணத்தை கொடுத்து இருக்கின்றனர். விபரீதத்தை புரிந்து கொண்ட பெண்மணி, சுந்தர்கி கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல்துறையினர், கணவர் மற்றும் அவரின் இரண்டு ஆண் நண்பர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து மூவரையும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை மற்றும் வரதட்சணைக்கொடுமை வழக்குகளில் கைது செய்துள்ளனர்.