Stray Dogs Dies: மின்சாரம் தாக்கி 3 தெருநாய்கள் பரிதாப பலி; நெஞ்சை ரணமாக்கும் நேரடி காட்சிகள்..!
அறுந்து கிடந்த மின்கம்பி தேங்கிய நீரில் விழுந்துவிட, அது தெறியாமல் அடுத்தடுத்து சென்ற 3 நாய்கள் பரிதாபமாக உயிரிழந்தன.
அக்டோபர் 14, கடலூர் (Cuddalore News): வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கான வாய்ப்பு, வடகிழக்கு பருவமழை தொடக்க சூழல் ஆகிய காரணங்களால் தமிழ்நாட்டில் வரும் 4 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உட்பட 19 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலாகவே தலைநகர் சென்னையில் லேசான மழை பெய்து வருகிறது. மதுரை, கோவை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. SSLC HSC Board Exams: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அறிவிப்பு; முழு விபரம் உள்ளே.!
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
வடகிழக்கு பருவமழையின்போது அடுத்தடுத்த புயல்கள், தொடர் மழை காரணமாக மாநில அளவில் எழும் பாதிப்புகள் மற்றும் மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். மாவட்ட அளவில் மின்வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கவும், மழைக்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலூரை பொறுத்தவரையில் நேற்றும்-இன்றும் மழை தொடருகிறது.
மின்சாரம் தாக்கி தெருநாய்கள் மரணம்:
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூர் பகுதியில், தேங்கியிருந்த மழைநீரில் மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்துள்ளது. இதனை அறியாத தெரு நாய்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்ற நிலையில், மூன்றும் மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து பலியானது. மின்கம்பி அறுந்து விழுந்ததை ஒருவர் மின்சார ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தபோது, 3 நாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளது என ஆதங்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாய்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பதறவைக்கும் காணொளி:
வெள்ளம், மின்சார பிரச்சனை உட்பட அவசர அழைப்புகளுக்கு மாநில கட்டுப்பாட்டு அறை எண் 1913 க்கு தொடர்பு கொள்ளவும்.