SSLC - HSC Board Exams Date 2025 (Photo Credit: @sunnewstamil / @Anbil_Mahesh X)

அக்டோபர் 14, கோயம்புத்தூர் (Coimbatore News): தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் பயின்று வரும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டின் மார்ச் மாதம் அரசுப் பொதுத்தேர்வுகள் நடைபெறும். அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகள், இன்று கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் வைத்து வெளியிடப்படும் என முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மாணவர்களுக்கான தேர்வு அட்டவணைகள் வெளியாகியுள்ளன. வானிலை: இன்று சென்னை உட்பட 19 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! 

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை (HSC 12th Exam Date Tamilnadu):

செய்முறை அறிவியல் தேர்வு நடக்கும் தேதிகள்: 07.02.2025 முதல் 14.02.2025

03.03.2025 - தமிழ், இதர மொழிப்பாடங்கள்

06.03.2025 - ஆங்கிலம்

11.03.2025 - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல்,

14.03.2025 - கணினி அறிவியல், புள்ளியில், உயிரி வேதிதியால்,

18.03.2025 - தாவரவியல், வரலாறு, உயிரியல்,

21.03.2025 - கணக்குப்பதிவியல், வேதியியல், புவியியல்,

25.03.2025 - பொருளாதாரம், இயற்பியல்

தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: மே 09, 2024

11ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை (HSC 11th Exam Date Tamilnadu):

செய்முறை அறிவியல் தேர்வு நடக்கும் தேதிகள்: 15.02.2025 முதல் 21.02.2025

05.03.2025 - தமிழ், இதர மொழிபடங்கள்

10.03.2025 - ஆங்கிலம்

13.03.2025 - கணினி அறிவியல், கணினி பயன்பாட்டில், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல்

17.03.2025 - வரலாறு, உயிரியல்,

20.03.2025 - இயற்பியல், பொருளாதாரம்

24.03.2025 - கணிதம், விலங்கியல், வணிகம்,

27.03.2025 - வேதியியல், கணக்கியல், புவியியல்

தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: மே 19, 2024

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை (SSLC 10th Exam Date Tamilnadu):

செய்முறை அறிவியல் தேர்வு நடக்கும் தேதிகள்: 22.02.2025 முதல் 28.02.2025

28.03.2025 - தமிழ், இதர மொழிபடங்கள்

02.04.2025 - ஆங்கிலம்

04.04.2025 - விருப்ப மொழிப்பாடம்

07.04.2025 - கணிதம்

11.04.2025 - அறிவியல்

15.04.2025 - சமூக அறிவியல்

தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: மே 19, 2024

தேர்வு நேரம்: காலை 10:00 மணிக்கு தொடங்கி மதியம் 01:15 க்கு நிறைவு பெறுகிறது. காலை 09:15 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்கு வந்திருப்பது நல்லது. 09:30 மணிக்கு மேல் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

பத்து, பதினொன்று, பனிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்புகள் விபரமாக உங்களின் பார்வைக்கு பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது: