Female Friends Molest Minor Boy: 17 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தாயின் 2 தோழிகள்; தந்தையிடம் கண்ணீர்விட்டு கதறிய சிறுவன்.!
அந்தரங்க பகுதிகளை தொடச்சொல்லி கொடுமை செய்த தாயின் தோழிகள், கடந்த 5 ஆண்டுகளாக சிறுவனை சீரழித்த பகீர் சம்பவம் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 13, அகமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மாவட்டம், வஸ்திரப்பூர் பகுதியை சேர்ந்த 40 வயது நபர், அங்குள்ள (Mother's Female Friends Molest Minor Boy in Gujarat) காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, அந்த புகாரில் தனது 17 வயது மகனை, தாயின் 2 தோழிகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த புகாரில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை தரப்பில் கூறப்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.
தோழிகளை நம்பி மோசம்போனே பெண்:
அதாவது, 40 வயது நபருக்கும் - அவரின் மனைவிக்கும் இடையே நடந்த குடும்பத்தகராறு காரணமாக, இருவரும் கடந்த பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 40 வயது நபரின் மனைவிக்கு 2 பெண் தோழிகள் இருக்கும் நிலையில், அவரின் வீட்டிற்கு அவ்வப்போது பெண்மணி சென்று வந்துள்ளார். ஒருசில நேரம் அவர்களின் பராமரிப்பில் மகனை விட்டு தனது வேலைகளையும் கவனித்து வந்துள்ளார். TN Weather Update: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள்; நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!
2 பெண்களாக சேர்ந்து சிறுவனுக்கு இழைக்கப்பட்ட கொடுமை:
இதனிடையே கடந்த 2019 - 2024 க்கு இடைப்பட்ட காலங்களில் பெண்ணின் 17 வயது மகனை அவர்கள் தங்களின் அந்தரங்க உறுப்பை தொடச்சொல்லி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். முதலில் சிறுவனை இப்படியான சீண்டலுக்கு பயன்படுத்திக்கொண்டவர்கள், பின்னாளில் சிறுவனை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்துள்ளனர். இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்ட சிறுவன், தனது 11 வயதில் இருந்து இவ்வாறான துயரத்தை எதிர்கொண்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை:
கடந்த சில மாதமாகவே இவர்களின் 2 பெண்களின் செயல்பாடுகள் எல்லை மீறியதைத் தொடர்ந்து, மகன் தனது தந்தையிடம் கண்ணீருடன் விபரத்தை தெரியப்படுத்தி இருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன சிறுவனின் தந்தை, அங்குள்ள வஸ்திரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)