Youth Dies by Snake Bite: தன்னை தீண்டிய பாம்பின் தலையை சாப்பிட்ட இளைஞர் மரணம்; விஷம் தலைக்கேறி., ஆத்திர வெறியில் நடந்த பயங்கரம்.!
அவரை தீண்டிய பாம்பும் இளைஞரின் செயலால் பரிதாபமாக பலியானது.
ஜூன் 10, பிரதாபூர் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள சூரஜ்புர் மாவட்டம், ரேவதி காவல் எல்லைக்குட்பட்ட பேடியா கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் கோமா நீதம் (வயது 32). இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவில் வீட்டிற்குள் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், வெப்பம் அதிகம் காரணமாக நள்ளிரவு நேரத்தில் வீட்டின் வெளியே வந்து முற்றத்தில் தரையில் படுத்து உறங்கியுள்ளார். அச்சமயம், அங்கு வந்த விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று நீதமை தீண்டிவிட, உறக்கத்தில் இருந்து எழுந்தவர் தன்னருகே பாம்பு இருப்பதை கண்டுள்ளார். Union Ministers List Out Now: மூன்றாவது முறையாக பிரதமரான நரேந்திர மோடி; அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் யார்?.. லிஸ்ட் இதோ.!
கடிக்கு-கடி என பதில் செயலால் சோகம்:
இதனையடுத்து, பாம்பு தன்னை கடித்து இருப்பதை உறுதி செய்தவர், ஆத்திரத்தில் பாம்பை பிடித்து அதன் தலைகளை கடித்து குதறி இருக்கிறார். ஒருகட்டத்தில் பாம்பின் தலையை அவர் உட்கொண்டுள்ளார். பின்னர் பாம்பு தீண்டிய இடத்தில் அவர் பிளேடால் கிழித்து இரத்தத்தை வெளியேற்றும் முயற்சியில் இறங்க, அதற்குள் விஷம் தலைக்கேறி இருக்கிறது. நீதம் பாம்பின் தலையை உட்கொண்டதால், அவரின் உடலில் விஷம் பரவி இறுதி தருணத்தை அவர் எதிர்கொண்டுள்ளார். இதனால் ஏற்பட்ட உயிர்பயத்தில் அவர் அலறியுள்ளார்.
குடும்பத்தினர் சோகம்:
சத்தம் கேட்டு குடும்பத்தினர் வந்து சுதாரிப்பதற்குள் நீதம் பரிதாபமாக மயங்கி உயிரிழந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோதிலும், அங்கு நீதமின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இதனால் குடும்பத்தினர் பெரும் சோகம் அடைந்தனர். தகவல் அறிந்த ரேவதி காவல் துறையினர், நீதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.