Diwali Train Rush: ஏசி கோச்சை முன்பதிவில்லாத பெட்டியாக மாற்றிய தீபாவளி பயணிகள்; முன்பதிவு செய்தும் கிடைத்த ஏமாற்றம்..!
பெருவாரியாக திரண்டு ஏசி பெட்டிகள், முன்பதிவில்லாதது என்ற வேறுபாடு இன்றி தீபாவளிக்கு சொந்த ஊர் பயணிக்க முடிவெடுத்த பயணிகளால், முன்பதிவு செய்தவர்களுக்கு திடீர் ஏமாற்றமே மிஞ்சியது.
நவம்பர் 12, மும்பை (Mumbai): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரையும் - உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசிப்பூர் நகரையும் இணைக்கும் வகையில், வாராந்திர அதிவேக இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது தீபாவளி கொண்டாட்டங்கள் காரணமாக, இரயில் நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் முதல், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் வரை பயணிகள் கூட்டக்கூட்டமாக தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணிக்கின்றனர்.
இதனால் முன்பதிவு செய்த பயணிகளும் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளும் நிலையில், காவல் துறையினர் மற்றும் இரயில்வே நிர்வாகிகள் மக்கள் வெள்ளத்தினை கட்டுப்படுத்த இயலாது திணறி வருகின்றனர். Chandra Mohan Rao: தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் சந்திர மோகன் ராவ் காலமானார்; சோகத்தில் டோலிவுட்.!
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் தங்கியிருந்து பணியாற்றி வரும் நபரொருவர், வரோதாரா இரயில் நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊர் செல்வதற்கு, காசிப்பூர் நகரம் அதிவேக விரைவு (வ.எண்: 20941) இரயிலில், ஏசி வகுப்பில் முன்பதிவு செய்துள்ளார்.
இந்த இரயில் மும்பையில் இருந்து புறப்படுவதால், பலரும் அங்கேயே இரயிலில் ஏறிக்கொண்டனர். முன்பதிவு பெட்டி என்ற பாரபட்சமின்றி, கூட்டம் முன்பதிவில்லாத பெட்டி போல காட்சியளித்தது. சம்மந்தப்பட்ட நபர் இரயில் நிலையம் சென்றபோது, அவர்க்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது, ஏசி வகுப்பில் முன்பதிவு செய்திருந்த நிலையில், அந்த பெட்டி முன்பதிவில்லாத பெட்டி போல கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் தனது பயணத்தை மேற்கொள்ள இயலாமல் மனமுடைந்துபோன நபர், தனது முன்பதிவு டிக்கெட் தொகை ரூ.1172-ஐ இரயில்வே நிர்வாகம் அப்படியே வழங்க வேண்டும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில், "எனது தீபாவளி 2023 ஐ அழைத்ததற்கு நன்றி. என்னைப்போல பலரும் ஏசி வகுப்பில் முன்பதிவு செய்து, பயணத்தை தொடர இயலாமல் அவதிப்பட்டனர். எனக்கு முழு அளவிலான தொகையும் திரும்ப செலுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
அவரின் கருத்து பதிவிடல்களை கொதிக்கும்போது, இவ்வாறான செயல்முறை காரணமாக பயணம் தடைபட்டு புகார் பதிவு செய்தால், நீதிமன்றத்தை நாடி ரூ.25 ஆயிரம் வரை இழப்பீடு தொகை பெறலாம் எனவும் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.