மே 20, சென்னை (Technology News): சம்பளக் கணக்கு (Salary AC) என்பது நேரடி வைப்புத்தொகை மூலம் சம்பளம் பெறும் தனிநபர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வங்கிக் கணக்கு ஆகும். சம்பளக் கணக்கை எந்தவொரு தனிநபராலும் திறக்க முடியாது. இது ஒரு நிறுவனத்துக்கும், வங்கிக்கும் இடையிலான இணைப்பாக இருக்கும். இந்த சம்பளக் கணக்கு பணியாளருக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. Tech Tips: மழைக் காலத்தில் ஏசியை பயன்படுத்தலாமா? கவனம் தேவை.. முக்கிய டிப்ஸ் இதோ..!
முக்கிய அம்சங்கள்:
- ஜீரோ பேலன்ஸ் கணக்கு. குறைந்தபட்ச இருப்பு தேவைகள் எதுவும் இல்லை.
- இலவச டெபிட் கார்டு, பாஸ்புக் மற்றும் நெட் பேங்கிங் வசதி கிடைக்கும்.
- ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது, ஆன்லைன் பரிமாற்றங்கள் போன்றவற்றில் இலவச வரம்பற்ற பரிவர்த்தனைகள்.
- வழக்கமான சேமிப்புக் கணக்குகளுடன் ஒப்பிடும்போது, சேமிப்புக்கு அதிக வட்டி விகிதம் கிடைக்கும்.
- பல்வேறு தள்ளுபடிகள் அல்லது சலுகைகள் இதன்மூலம் கிடைக்கிறது.
- எனவே, ஒரு வழக்கமான சேமிப்புக் கணக்குடன் ஒப்பிடும்போது, சம்பளக் கணக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. உங்களது நிறுவனம், மாதச் சம்பளத்தை ஒரு குறிப்பிட்ட தேதியில் இந்தக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கிறது.