Hyderebad Fire Accident (Photo Credit : @CoreenaSuares2 X)

மே 18, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், சார்மினார் அருகே குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை திடீரென ஏசி வெடித்து தீ விபத்து (Hyderabad Fire Accident) ஏற்பட்டது. இந்த பயங்கர தீபத்தில் நான்கு குடும்பங்கள் சிக்கியதாக கூறப்படும் நிலையில், தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 4 Year Old Boy Dies: 4 வயது சிறுவனின் அந்தரங்க உறுப்பில் காயம்.. ஆசிரியர்கள் தாக்கியதில் துடிதுடிக்க நேர்ந்த சோகம்.! 

பயங்கர தீ விபத்து :

அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஆறு பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பலரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் விசாரணை :

மேலும் விபத்தில் சிக்கிய 16 பேர் உயிருக்கு எந்த ஆபத்துமின்றி மீட்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தீ விபத்து தொடர்பாக அதிகாரிகள் ஷார்ட் சர்க்யூட் (AC Explosion) காரணமாக விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்து தொடர்பான களநிலவர காட்சிகள் :