
மே 19, சென்னை (Technology News): கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. வெயில் நிலைக்கு ஏசி (AC) இல்லாமல் இருக்க முடியாது என்பது போல ஆகிவிட்டது. தற்போது, பருவமழை தொடங்கி பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆனாலும், வெப்பநிலை குறைந்தபாடில்லை. இதனை தணிக்க மக்கள் ஏசி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இப்படி இடி, மின்னல், மழை என்று பெய்யும் போது ஏசி போடலாமா. இல்லை போட்டால் ஏசிக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம். Scam Alerts: ரேபிடோவில் ஆர்டர்.. பணமே அனுப்பாமல் திருட்டு வழியில் செல்போன் வாங்கிய இளைஞர் கைது.!
மழை காலத்தில் கவனம் தேவை:
உங்களது ஏசி எந்த வகையாக இருந்தாலும் லேசான மழை பெய்யும் போது, இயக்கினால் எந்த ஆபத்தும் இல்லை. லேசான மழையில், வெளிப்புற ஏசி யூனிட், அலகுகளில் குவிந்துள்ள தூசி மற்றும் அழுக்குகளும் சுத்தம் செய்யப்படும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால், கனமழை மற்றும் புயல் காலங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். கனமழையால் வெளிப்புற அலகு நேரடியாக மழையில் நனையாமல் பாத்துக்கொள்வது நல்லது. ஏசி-யின் வெளிப்புற அலகுகள் மழை, புயலை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தாலும், குறிப்பிட்ட அளவிலான சேதத்தை சந்திக்கும். அதனால் வெளிப்புற அலகு முடிந்தவரை புயல் மழையால் பாதிக்காத இடத்தில் வைப்பது நல்லது.
மின் பாதுகாப்பு:
ஏசி உட்பட எந்தவொரு மின் சாதனத்தையும் பயன்படுத்தும்போது மின் பாதுகாப்பை கவனத்தில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். உங்கள் ஏசி யூனிட்டின் மின்சாரம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வயரிங்கில் ஏதேனும் சிக்கல் இருந்தால், மழையின் போது ஏசியை அணைத்துவிட்டு, வயரிங் அமைப்புகளை சரி செய்த பின்னர் பயன்படுத்தவும். மழை பெய்யும் போது ஏசியை இயக்குவது சில வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தும். ஏசி வழக்கத்தை விட வேகமாக வெப்பம் அடையலாம். அதற்கு காரணம் மழையால் உங்கள் ஏர் கண்டிஷனர் சுருள்கள் ஈரமாகிவிடும். அதை மீறி சுழன்று இயங்க வேண்டி இருக்கும். அது மட்டுமில்லாமல், மழையின் போது ஏசி மூலம் தண்ணீர் வீட்டிற்குள் வர வாய்ப்புள்ளது.
பயன்படுத்த வேண்டாம்:
அதிக மழை வந்தால் ஏசியை இயக்க வேண்டாம். அதே போல புயலின் போது ஏசியை இயக்கக்கூடாது என நிபுணர்கள் கருதுகின்றனர். இடி அல்லது மின்னல் உங்கள் வீட்டைத் தாக்கினால், அது மின்சாரக் கம்பிகள் வழியாகச் சென்று உங்கள் ஏசி யூனிட்டை சேதப்படுத்தும். இதனால் முடிந்தவரை மழை, புயல் இருக்கும் சூழலில் ஏசியை இயக்க வேண்டாம்.