
ஜூலை 06, சென்னை (Technology News): இந்தியா முழுவதும் தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கும் செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிக மழை கிடைக்கும். அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழையும் தமிழ்நாட்டுக்கு சாதகமான மழைபொழிவை தரும். இவ்வாறான மழைக்காலங்களில் ஏர் கண்டிஷனரை பயன்படுத்தலாமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஏர் கண்டிஷனர் கோடைகால வெப்பத்திற்கு நிவாரணம் அளிக்கும். புயல் சமயத்தில் இதனை பயன்படுத்துவது அதிக செலவையே தரும். ஒரு சிலருக்கு வெளிப்புற வெப்பநிலை மற்றும் வீட்டின் குளிர்நிலை காரணமாக சில நோய் தொற்றுகளும், காய்ச்சல், சளி போன்ற சிறிய அளவிலான பாதிப்புகளும் ஏற்படலாம். OPPO Reno14 5G: 6000mAh பேட்டரி.. ஏராளமான ஏஐ அம்சங்களுடன் ஓப்போ ரெனோ14 5ஜி அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
மழைக்காலங்களில் கவனம் :
மழைக்காலங்களில் மின்தடை என்பது சாதாரணம் என்பதால் ஏசி பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். இந்த சமயத்தில் ஏசி சேதமடைய வாய்ப்புள்ளதால் அதனை தவிர்ப்பதும் நல்லது. அதிக மழை பெய்யும் போது அவுட்டோர் யூனிட் வெளியே இருக்கும் என்பதால் ஏசியை செயல்படுத்தாமல் இருப்பது நல்லது. பலத்த மழையின் போது வெளிப்புறத்தின் காற்று மற்றும் ஈரப்பதம் காரணமாக ஏர் கண்டிஷனர் அதிக வேலையை செய்யும். இதனால் எலக்ட்ரிசிட்டி பில் அதிகமாகும். மேலும் இடி, மின்னல் போன்றவை மின்சார பொருட்களான ஏசியை சேதப்படுத்தலாம். சில நேரம் மின் கசிவு ஏற்பட்டால் அது மின் விபத்துக்கு வழிவகை செய்யும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.