Girl Gang Raped: 3 மாதங்களாக வீட்டில் அடைத்துவைத்து இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம், நால்வர் கும்பலால் நடந்த நடுநடுங்க வைக்கும் பயங்கரம்.!
வேலை இன்றி வறுமையால் அவதிப்பட்ட பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறிய கயவன், தனது நண்பர்கள் கும்பலுடன் சேர்ந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சோகம் அரங்கேறி இருக்கிறது.
பிப்ரவரி 15, குர்கான் / குருகிராம் (Haryana News): மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் பகுதியை சேர்ந்த இளம்பெண், வறுமையின் காரணமாக கஷ்டப்பட்டு இருக்கிறார். இவர் வேலை தேடிவந்த நிலையில், எங்கும் சரியான வேலை என்பது கிடைக்கவில்லை. இதனால் தனக்கு தெரிந்த நபரான ஜெப்ரின் கல்கோ @ அருண் குமார் என்பவரிடம் வேலை குறித்து கூறி இருக்கிறார்.
வேலை வாங்கித்தருவதாக அழைத்து வரப்பட்ட இளம்பெண்: அவர் தன்னுடன் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமுக்கு வந்தால் தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி இருக்கிறார். இதன்பேரில் பெண்ணும் அருண் குமாருடன் குருகிராம் புறப்பட்டு சென்று இருக்கிறார். அங்கு சில நாட்கள் அருண் தனது அறையில் பெண்ணை எவ்வித பிரச்சனையும் இன்றி தங்க வைத்துள்ளார். Bus Overturned Accident: சாலையில் திடீரென குறுக்கே புகுந்த நபர்; ஒருவர் உயிரை காப்பாற்ற எண்ணி 12 பேருக்கு நடந்த சோகம்.. நடத்துனர் பரிதாப பலி.!
நால்வர் கும்பலால் சோகம்: கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குருகிராம் சென்றிருந்த நிலையில், அருண் குமார் தனது நண்பர்கள் மூவரை வரவழைத்து இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பெண்மணி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், வீட்டில் பிணையக்கைதியாக அடைத்துவைத்து பலாத்கார கொடூரம் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.
தப்பிவந்த காவலர்களுக்கு தகவல் கொடுத்த பெண்மணி: 3 மாதங்களாக உதவி கிடைக்காமல் கயவர்களிடம் சிக்கி அவதிப்பட்ட பெண்மணி, எப்படியோ அங்கிருந்து தப்பி வந்து உதவி கேட்டு இருக்கிறார். அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பெண்ணிடம் விசாரித்தபோது உண்மை அம்பலமாகவே, அதன்பேரில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Gautami Political Carrier: 26 ஆண்டுகால தேசிய கட்சிப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கௌதமி; அதிமுகவில் இணைவு..!
கயவர்கள் கைது: இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் புகார் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அருண்குமார், இசுராஜ், சுமர், அஹ்மராஜ் ஆகியோரை கைது செய்தனர். குற்றவாளிகள் நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.