பிப்ரவரி 15, கட்டக் (Odisha News): ஒடிஷா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் நகரில் இருந்து கட்டக் நோக்கி 30 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து, தனது இலக்கை நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தது. பேருந்து அங்குள்ள கோபால்பூர் பகுதியில் சென்றுகொண்டு இருந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென மிதிவண்டியி ஒருவர் வந்துள்ளார். இதனால் ஓட்டுநர் பதற்றமாகி, அவரின் மீது மோதாமல் இருக்க முற்பட்டுள்ளார். Gautami Political Carrier: 26 ஆண்டுகால தேசிய கட்சிப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கௌதமி; அதிமுகவில் இணைவு..!
#WATCH | Cuttack, Odisha: A bus moving from Bhubaneswar to Cuttack overturned near Gopalpur trying to save a cyclist, killing the bus conductor and injuring 12 other passengers. The injured were shifted to SCB medical casualty: Deputy Fire Officer Abani Kumar Swain, Bhubaneswar pic.twitter.com/byaSSUWyxH
— ANI (@ANI) February 14, 2024
உயிரை காப்பாற்ற நினைத்து சோகம்: அச்சமயம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் நடத்துனர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சென்ற மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர், விபத்தில் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நடந்த முதற்கட்ட விசாரணையில், மிதிவண்டியில் திடீரென குறுக்கே புகுந்தவரின் உயிரை காப்பாற்ற நினைத்து விபத்து நடந்தது தெரியவந்ததது.