Actress Gautami & AIADMK Edappadi Palanisamy (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 15, சென்னை (Chennai): தமிழ் திரையுலகில் 90-களில் உச்ச நட்சத்திர நடிகையாக வலம்வந்தவர் நடிகை கௌதமி. ரஜினி, கமல் உட்பட பல நட்சத்திரங்களுடன் இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் வெற்றிவிழா கண்டு இருக்கின்றன. 1987 முதல் 1999 வரையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் மிகப்பெரிய நடிகையாக வலம்வந்த கௌதமி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான படங்களிலும் நடித்திருந்தார்.

கமலை பிரிந்த கௌதமி (Gautami): 1998ல் திருமணம் 1999ல் விவாகரத்து என திரையுலக பயணமும், திருமண வாழ்க்கையும் அவரின் எதிர்காலத்தை தவிடுபிடியாக்க, 2005ம் ஆண்டு முதல் 2016 வரையில் நடிகர் கமல் ஹாசனுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார். 2016ல் கமலின் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்த கௌதமி, அவரிடம் இருந்து பிரிந்து தற்போது தனது மகளுடன் வசித்து வருகிறார்.

பாஜகவில் (BJP) இணைந்த நடிகை: சமூக ஆர்வலராக இருந்து வரும் நடிகை கௌதமி, கடந்த 1997ல் அத்வானி, வாஜ்பாய் முன்னிலையில் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டு 25 ஆண்டுகளாக அக்கட்சிக்காக பணியாற்றி வந்தார். கடந்த 2023ம் ஆண்டு உட்கட்சியில் நடந்த பிரச்சனை காரணமாக அவர் அக்கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, இராஜபாளையம் தொகுதியின் பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார். Malika Rajput Suicide: பிரபல பாடகி மல்லிகா ராஜ்புத் தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி..! 

அதிமுகவில் இணைவு: 2017ம் ஆண்டு அவர் வேறு கட்சிக்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையிலும், சூழ்நிலை மற்றும் கருத்துக்கள் ஒவ்வாத காரணத்தால் மீண்டும் பாஜகவுக்கே வந்தார். இந்நிலையில், நேற்று அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy) முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அனல்பறக்கும் அரசியல்களம்: தேசிய கட்சியில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர், தற்போது தன்னை மாநில அளவில் செல்வாக்கில் இருக்கும் கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார். எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தல், 2026 மாநில சட்டப்பேரவை தேர்தல் என அடுத்த 2 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு அரசியல்களம் சூடேறி இருக்கும் நிலையில் நடிகையின் கட்சி தாவல் நடந்துள்ளது.

அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள்: லைப் அகைன் பவுண்டேசன் (Life Again Foundation LAF) என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கிய நடிகை கௌதமி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்து வருகிறார். அவர் தனது 35 வயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் நலம்பெற்றார். அதனாலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்ய அறக்கட்டளை தொடங்கினார். அவ்போது அறக்கட்டளை சார்பில் கேன்சர் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார்.