Perfume Factory Fire Accident: வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; பெண் பலி., 31 பேர் காயம்., 9 பேர் மாயம்.!
ஒருவர் பலியாகி, 31 பேர் படுகாயமடைந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 03, ஹிமாச்சல பிரதேசம் (Himachal Pradesh News): ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள சோலன் மாவட்டம், நளகர்க், ஜேஹார்மஜ்ரி பகுதியில் என்.ஆர் அரோமா வாசனை (Aroma Perfume Factory) திரவிய தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100 க்கும் அதிகமான பணியாளர்கள் சுழற்சி முறையில் தினமும் வேலை பார்த்து வருகின்றனர்.
பயங்கர தீ விபத்து: இந்நிலையில், நேற்று இரவு இந்நிறுவனத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பணியாளர்கள் வேலைபார்த்துக்கொண்டு இருந்தபோதே தீ விபத்து ஏற்பட்ட காரணத்தால், பலரும் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Former CM Admit Hospital: முன்னாள் முதல்வருக்கு பன்றிக்காய்ச்சல், கொரோனா உறுதி; மருத்துவமனையில் அனுமதி.!
31 பேர் படுகாயம், ஒருவர் பலி: இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தீ விபத்தில் சிக்கிய 31 பேரை காயத்துடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். ஒரு பெண் சடலமாக மீட்கப்பட்டு, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
9 பேரின் நிலை தெரியவில்லை: நிகழ்விடத்தில் வேலை பார்த்து வந்தவர்களில் 9 பேரின் நிலை என்பது தெரியததால், தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்து அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களும் தீயின் பிடியில் சிக்கி உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அதிகாரிகள் விசாரணை: விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பெண்ணின் அடையாளமும் சேகரிக்கப்பட்டு வருகிறது.