பிப்ரவரி 03, ஜெய்ப்பூர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமானவர் அசோக் ஹெலாட் (Ashok Gehlot). இவர் தற்போது கொரோனா வைரஸ் மற்றும் பன்றிக்காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார். வெள்ளிக்கிழமையான நேற்று நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே காய்ச்சலின் காரணமாக அவதிப்பட்ட அசோக், மருத்துவமனைக்கு சென்று சோதனைசெய்துகொண்டதில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். UPI Now In France: இப்போது பிரான்சில் யுபிஐ.. இந்திய சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!
உடல்நலனில் கவனம் செலுத்த கோரிக்கை: மேலும், அடுத்த 7 நாட்களுக்கு தன்னை தொண்டர்கள் மற்றும் நேரில் சந்திக்க விரும்பிய மக்கள் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வந்து காத்திருக்க வேண்டாம் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளார். விரைவில் உடல்நலம் சரியாகி வீட்டிற்கு வருவேன். மாறிவரும் வானிலை காரணமாக ஏற்படும் தொற்றுகளில் இருந்து தப்பிக்க, உங்களின் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள் என்றும் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை மருத்துவ வல்லுநர் குழு வழங்கி வருகிறது.