Love Couple Suicide: கழுத்தை நெரித்த கடன் தொல்லையால் காதலன் தற்கொலை; காதலியும் உயிரை மாய்த்ததால் கண்ணீரில் பெற்றோர்.!

கடன் தொல்லை காரணமாக அவதிப்பட்ட காதலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி மாணவியான இளம்பெண்ணும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

Suicide Couple - / Love Couple File Pic (Photo Credit @Sriramrpckanna1 X / Pixabay)

மே 29, காரைக்குடி (Pudukkottai News): திருச்சி மாவட்டத்தில் உள்ள சங்கிலியாண்டவர்புரம் பகுதியில் வசித்து வருபவர் முத்துக்குமார் (வயது 27). இவர் திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில், கடன் வழங்கும் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, ஐஸ்கேனி வீதியில் வசித்து வருபவர் சுபஸ்ரீ (வயது 20). இவர் புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.

காதல் ஜோடியின் சுற்றுலா பயணம்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் நடைபெற்ற உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்காக சுபஸ்ரீ சென்றபோது, முத்துக்குமார் - சுபஸ்ரீ இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பாக தொடங்கிய பழக்கம் பின்னாளில் காதலாக மாறி இருக்கிறது. இதனையடுத்து காதல் ஜோடி இருவரும் அவ்வப்போது வெளியூர் சென்று (Lover Commit Suicide due to Debt Problems) சந்தித்து வந்துள்ளனர். சுற்றுலாவும் சென்றிருக்கின்றனர். இதற்காக முத்துக்குமார் கடன் வாங்கி இருக்கிறார். Virudhunagar Shocker: கோவில் வளாகத்தில் சிலை அமைப்பதில் தகராறு; கொலை கேசில் சிக்கிய பெண் காவல் ஆய்வாளர் காதலருடன் கைது.! 

கடன் தொல்லையால் விபரீதம்: இதனிடையே, காரைக்குடியில் இருக்கும் வீட்டிற்கு வந்த முத்துக்குமார், சில நாட்களுக்கு முன் தூக்கிட்டு உயிரைமாய்த்தார். இந்த தகவல் விடுதியில் தங்கி படிக்கும் சுபஸ்ரீக்கு தெரியவந்துள்ளது. இதனிடையே, தனது அறைக்குள் சென்று கதவை சாற்றி அழுதுகொண்டு இருந்த சுபஸ்ரீ நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் கதவை திறந்து பார்த்தபோது, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்தது உறுதியானது.

காதலியும் தற்கொலை செய்துகொண்ட சோகம்: இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கடன் தொல்லை காரணமாக காதலன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் தானும் தற்கொலை செய்துகொண்டு காதலி உயிரை மாய்த்து அம்பலமானது. இத்துயர சம்பவம் இரு குடும்பத்தார் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.