Cockroach in Biryani: ஆசையாக சாப்பிட்ட பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி.. பதறிப்போன உணவுப்பிரியர்.. வைரல் விபரம் இதோ.!

அதனை கட்டுப்படுத்த சட்டங்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் கடுமையாக இருக்க வேண்டும்.

Cockroach in Biryani | Biryani File Pic (Photo Credit: @maplesyrup_411 Reddit.com)

டிசம்பர் 01, ஹைதராபாத் (Hyderabad): கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய மக்களிடம் குறுகிய காலத்தில் அதிக வரவேற்பை பெற்ற உணவுகளில் பிரியாணி (Biryani) பெரிய இடத்தை பிடித்துவிட்டது. இன்றளவில் உள்ள உணவகங்களில், உணவு தயாரிப்பு என்பது மிகப்பெரிய சுகாதார கேள்விக்குறியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை உறுதி செய்யும் வகையில், சில நேரம் உணவுகளில் பூச்சிகள் போன்றவையும் தென்படுகின்றன.

தரம் எங்கே போனது?: பள்ளிகளில் குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவுகள் முதல், தெருவோரம் சிற்றுண்டி கடைகள் வரை, நட்சத்திர உணவகத்திலும் சில நேரங்கள் உணவின் தரம் என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பழைய உணவை வழங்குவது, பூச்சிகள் விழுந்ததை கவனிக்காமல் பரிமாறப்பட்ட உணவு, புழுக்கள் நெளிந்த உணவு போன்றவையும் இருக்கின்றன. Van Truck Collison: லாரி - வேன் மோதி கோர விபத்து: கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர் 8 பேர் பரிதாப பலி.. பனிமூட்டம், அதிவேகத்தில் நடந்த சோகம்.! 

பிரியாணியில் கரப்பான்: இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், கோட்டி பகுதியை சேர்ந்த நபர், அங்குள்ள பிரபலமான உணவகம் ஒன்றில் பிரியாணி வாங்கி சாப்பிட்டு இருக்கிறார். அச்சமயம், பிரியாணியில் கரப்பான்பூச்சி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர், அதனை தனது செல்போனில் பதிவு செய்து ரெட்டிட் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வாடிக்கையான பயனாளிகள் கவலை: இந்த பதிவுகள் வைரலாகவே, அந்த உணவகத்தில் விரும்பி பிரியாணி சாப்பிட்ட பலரும் தற்போது கவலைபட தொடங்கியுள்ளனர். ஒருவர், தான் வாரத்தின் மூன்று நாட்கள் அங்குதான் விரும்பி பிரியாணி சாப்பிடுவேன். ஆனால், இவ்வாறான செயல் என்னை கவலைப்பட வைக்கிறது எனவும் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர் இதுதொடர்பாக புகாரும் அளித்துள்ளார்.

Beware of Grand Hotel, Dead cockroach in Biryani

byu/maplesyrup_411 inhyderabad