Palestine UNGA Resolution: பாலஸ்தீனியத்துக்கு ஆதரவாக ஐநா மன்றத்தில் வாக்களித்த இந்தியா - விபரம் உள்ளே.!
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து இருக்கிறது. இந்த தீர்மானத்திற்கு 143 நாடுகள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து கரகோசத்துடன் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.
மே 11, ஜெனிவா (World News): கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் நாட்டை எதிர்த்து தங்களின் பூர்வீக நிலத்தை மீட்க போவதாக பாலஸ்தீனிய (Israel Palestine War) நாட்டைச் சேர்ந்த ஹமாஸ் குழுவினர் பல்முனை தாக்குதலை நடத்தி போரை ஆரம்பித்து வைத்தனர். போரின் தொடக்கத்தில் இஸ்ரேல் நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பாலஸ்தீனிய (Hamas Group) ஹமாஸ் அமைப்பினர், கண்ணில்படும் இஸ்ரேலியர்களை கொடூரமாக கொலை செய்தனர். பலர் பிணைக்கையாதியாக கடத்தி செல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து, பதிலடியாக போரில் களமிறங்கிய இஸ்ரேல், தற்போது வரை தனது இராணுவத்தின் முழு பலத்தையும் பாலஸ்தீனத்துக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது.
ஹமாஸை ஒழிக்காமல் திரும்பமாட்டோம் என இஸ்ரேல் விடாப்பிடி: இதனால் அங்குள்ள பல நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன. ஏவுகணை தாக்குதல், இஸ்ரேல் இராணுவத்தின் அணிவகுப்பு என பாலஸ்தீனத்தில் தற்போது வரை 35,000-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட அழிவை கண்டு பின் உலக நாடுகள் அனைத்தும் மனிதாபிமான அடிப்படையில் அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. ஐநா மன்றத்தில் போரை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், இஸ்ரேல் ஹமாஸ் குழுவை ஒழிக்காமல் நாங்கள் பாலஸ்தீனிய மண்ணை விட்டு வெளியேற மாட்டோம் என்ற ஒற்றை வார்த்தையை கூறி போரை தொடர்ந்து உச்சகட்டத்திற்கு அழைத்து செல்கிறது. Dhoni Fan in Ground: தோனியின் கால்களில் விழுந்த ரசிகர்; சென்னை Vs குஜராத் அணிக்கு இடையேயான போட்டியில் ரசிகரின் செயல்.!
ஐநா சபையில் பாலஸ்தீனியத்திற்கு ஆதரவாக தீர்மானம்: இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொடர்ந்து வருகின்றது. மேலும், அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவதால், அமெரிக்காவுக்கு எதிரான மத்திய கிழக்கு நாடுகள் போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று உலகப் போராக இது மாறலாம் என்ற அச்சத்தையும் தந்துள்ளது. இந்நிலையில், ஐநா மன்றத்தில் பாலஸ்தீனியத்தின் உறுப்பினர் முயற்சிக்கு ஆதரவாக இந்தியா தனது வாக்குகளை செலுத்தி இருக்கிறது. ஐநா மன்றத்தில் பாலஸ்தீனியத்தை முழு உறுப்பினராக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம் கொண்டு வந்தது.
அரங்கை அதிரவைத்த கரகோஷம்: 193 உறுப்பினர்கள் கொண்ட பொதுச்சபையில், அவசர சிறப்பு அமர்வு கூடி ஐக்கிய அரபு அமீரகத்தால் பாலஸ்தீனியத்தை முழு உறுப்பினராக அங்கீகரிக்கும் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும், எதிராக 9 நாடுகளும் வாக்களித்திருந்தன. 25 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறியிருந்தன. இந்த வாக்கெடுப்பு ஏகபோகமாக நிறைவேறியதைத்தொடர்ந்து, அரங்கமும் கரகோச ஒலியால் நிரம்பியது. இந்த தீர்மானத்தின் வெற்றி வாயிலாக பாலஸ்தீனிய அரசு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராகவும் தகுதி பெற்று இருக்கிறது. Bus Fallen Into River: தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஆற்றில் பாய்ந்த பேருந்து; 7 பேர் பரிதாப பலி..!
வரலாறு என்ன? இந்தியாவைப் பொறுத்தவரையில் வரலாற்றின் பின்னணியில் 1974 ஆம் ஆண்டு பாலஸ்தீனிய மக்களின் சட்டபூர்வமான பிரதிநிதித்துவபடுத்தலுக்கு பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தை அங்கீகாரம் செய்த அரபு இல்லாத நாடுகளில் இந்தியா முதன்மையானதாகும். 1988 ஆம் ஆண்டில் பாலஸ்தீனிய அரசை அங்கீகரித்த நாடுகளில் இந்தியாவும் கவனிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு மத்திய அரசு தனது பாலஸ்தீனிய ஆணையத்திற்கான பிரதிநிதி அலுவலகத்தையும் திறந்து இருந்தது. முன்னதாக ஐநா மன்றத்தில் பாலஸ்தீனியம் பார்வையாளர் நாடாக கலந்து கொண்ட நிலையில், தற்போது அதனை உறுப்பினராகவும் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்தியா ஐநா மன்றத்தில் நிரந்தர உறுப்பினராக பல ஆண்டுகளாக போராடி வருகிறது. சீனா மற்றும் அதன் பின்னணியில் உள்ள நாடுகள் இந்த விஷயத்திற்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கின்றன.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)