மே 11, செயின்ட் பீட்டர்பர்க் (World News): ரஷ்ய நாட்டில் உள்ள செயின்பீட்டர்பர்க், அங்குள்ள மிகப்பெரிய நகரங்களில் இரண்டாவது முக்கியமான நகராகும். வெள்ளிக்கிழமையான நேற்று பீட்டர்பர்க் நகரில் உள்ள மொய்கா ஆற்றின் பக்கவாட்டு பகுதியில், பேருந்து ஒன்று பயணம் செய்தது. இந்த பேருந்து திடீரென சாலையில் வந்த மற்ற வாகனங்கள் மீது இடித்து, தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஆற்றின் மீது பாய்ந்தது. Dogs Reunion with Their Owner: வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் பிரேசில்; 83 பேர் பலி., உரிமையாளர்களுடன் மீட்கப்படும் செல்லப்பிராணிகள்.! 

7 பேர் பலி: இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பயலரும் உயிரை கையில் பிடித்தபடி அவசரகதியில் வெளியேறினர். சிலர் பேருந்தின் உள்ளேயே சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மொத்தமாக ஏழு பேர் தற்போது வரை பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு தப்பிப்பிழைத்தோரை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியானவர்கள் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். Affair Wife Caught by Husband: 2 இளைஞர்களுடன் உல்லாசமாக இருந்த மனைவி; விடுதிக்குள் சென்று விருந்து வைத்த கணவன்.. பரபரப்பு சம்பவம்.! 

தொடர் பணியால் சோகம்? இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் அதே வேளையில், காவல்துறையினர் விபத்து தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர். பேருந்து ஓட்டுனரின் மனைவியிடம் ஊடகத்தினர் தங்களது பல்வேறு கேள்விகளை முன்வைத்தபோது, பேருந்து நிறுவனத்தின் மேலாளர் தனது கணவரை 20 மணி நேரம் தினமும் தொடர்ந்து வேலை செய்ய வற்புறுத்தியதாகவும், இதனால் ஏற்பட்ட உடல்நல குறைவில் விபத்து நடந்து இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அந்த தனியார் பேருந்து மீது 23 முறை விதிகளை மீறியதாக அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.