Sathu Beaten by Youth Gang: பெட்ரோல் பங்கில் பரபரப்பு செயல்; அமைதியாக நின்ற சாமியார் மீது போதை இளைஞர்கள் தாக்குதல்.!

குடிபோதையில் சுற்றிய்க்கொண்டு இருந்த இளைஞர்கள் மூவர், திடீரென சாமியாரின் மீது தாக்குதல் நடத்திய பரபரப்பு சம்பவம் அலிகார்க் பகுதியில் நடந்துள்ளது.

Sathu Beat by Youth Gang (Photo Credit: @SachinGuptaUP X)

மார்ச் 31, அலிகார்க் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார்க் மாவட்டம், சுகன்னா பெராம்பூர் பகுதியை சேர்ந்த சாது லேக்ராஜ் சிங். இவரின் மகன் ககராஜ் சிங். அங்குள்ள மாஜஹாலா கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கங்கிரி சவ்ஸ், காபிஸ், ராஜேஷ். சம்பவத்தன்று தந்தையும் - மகனுமான லேக்ராஜ் சிங் மற்றும் ககராஜ் சிங் அங்குள்ள பெட்ரோல் பங்கில் நின்று கொண்டு இருந்தனர். அச்சமயம் மேற்கூறிய 3 இளைஞர்கள் குழு மதுபோதையில் வருகை தந்துள்ளது. அச்சமயம் திடீரென சாது ககராஜ் சிங்கை இளைஞரில் ஒருவர் பாய்ந்து வந்து கடுமையாக தாக்கினார். Ship Hits Bridge: மேரிலேண்ட் போல, பாலத்தின் மீது மோதிய கப்பல்; அமெரிக்காவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.! 

இளைஞர்கள் மூவரும் அதிரடி கைது: அவரை சமாதானம் செய்த பிற இருவர், இளைஞரை அங்கிருந்து அழைத்து சென்றனர். இந்த காட்சிகள் பெட்ரோல் பங்கில் இருந்த கேமிராவில் பதிவாகி இருக்கிறது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ககராஜ் சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் குற்றச்செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் கங்கிரி சவ்ஸ், காபிஸ் மற்றும் ராஜேஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்களின் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 151ன் கீழ் அதிகாரிகள் வழக்குபதிந்துள்ளனர்.