Youth Bitten by a Snake: தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்த இளைஞர்; உயிர்காத்த மருத்துவர்கள்.!

மருத்துவமனைக்கு சாக்குப்பையில் பாம்பை தூக்கி வந்த இளைஞர், தன்னை கடித்த பாம்பை சிறைபிடித்து வந்ததாகவும், தன்னை காப்பாற்றுமாறும் கூறிய சம்பவம் பஹ்ரைச் மாவட்டத்தில் நடந்துள்ளது.

Snake Bite in Bahraich (Photo Credit: @ians_india X)

ஜூலை 13, பஹ்ரைச் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டம், கோதகி கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவரை, விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று தீண்டி இருக்கிறது. இதனையடுத்து, அவர் பாம்பை பிடித்துவிட, அதனை சாக்குப்பையில் போட்டு விரைந்து அங்குள்ள மருத்துவமனைக்கு வந்தார். Speeding Bus Collied with Lorry: அதிவேகத்தில் தறிகெட்டு இயங்கிய தனியார் பேருந்து.. லாரி மீது மோதி ஒருவர் துடிதுடிக்க பலி.! பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.! 

இளைஞரின் சாதுர்ய செயலால் உயிர்பிழைப்பு:

மருத்துவமனையில் தன்னை பாம்பு கடித்துவிட்டதாகவும், அதனை சாக்கு பையில் கொண்டு வந்துள்ளதாகவும் மருத்துவ பணியாளர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, விரைந்து சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் பாம்பை மீட்டனர். பின் பாம்பின் வகையை உறுதி செய்து, அதற்கேற்ப இளைஞருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. தகவலை அறிந்ததும் மருத்துவமனைக்கு விரைந்த பாவ்டி காவல்துறையினர் மற்றும் சரக வனத்துறை அதிகாரிகள், பாம்பை அடையாளம் கண்டு இளைஞருக்கு சிகிச்சை அளிக்க உறுதுணையாக இருந்துள்ளனர். பாம்பும் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக விடுவிக்கப்பட்டது.