Sand Truck Overturned: தறிகெட்டு குடிசைக்குள் புகுந்து கவிழ்ந்த மணல் லாரி; உடல் நசுங்கி குடும்பத்தினர் 8 பேர் பலி.! நெஞ்சை ரணமாக்கும் சோகம்.!
இரவு நேரத்தில் தங்களின் குடிசை வீடு மற்றும் வீட்டிற்கு வெளியே உறங்கிக்கொண்டு இருந்தவர்கள் மீது, தறிகெட்டு இயங்கிய லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் 8 பேர் பரிதாபமாக பலியான சோகம் உ.பி மாநிலத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜூன் 12, ஹரோடி (Uttar Pradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹரோடி (Harodi Truck Overturned Accident) மாவட்டம், நல்லவன் உன்னாவ் பகுதியில் மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்தில் சிக்கியது. சாலையோர குடிசைகள் மீது லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளான காரணத்தால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலியான 8 பேரில் 4 குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரேயொரு சிறுமி மட்டும் காயத்துடன் உயிர்பிழைத்து இருக்கிறார்.
குடும்பத்தினர் 8 பேரும் உடல் நசுங்கி பரிதாப பலி:
விபத்து நடந்த பின்னர், உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், குடிசைகளில் இருந்த மண்ணை கனரக இயந்திரம் கொண்டு அகற்றினர். பின் விபத்தில் பலியானோரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விசயம் குறித்து அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கணவன், மனைவி, 4 குழந்தைகள், உறவினர் ஒருவர் என 8 பேர் விபத்தில் பலியானது உறுதி செய்யப்பட்டது. CAN Vs PAK: கனடா அணியை பிதுக்கியெடுத்த பாகிஸ்தான்; பேட்டிங் & பவுலிங்கில் பொளந்துகட்டி அசத்தல் வெற்றி.!
பலியானவர்களின் விபரம் பின்வருமாறு.,
கான்பூரில் இருந்து ஹரோடி நோக்கி பயணம் செய்த மணல் லாரி, குடிசை பகுதியில் விபத்தில் சிக்கி இருக்கிறது. இந்த விபத்தில், சாலையோரம் குடிசை அமைத்து வசித்து வந்த அவதேஷ் பல்லா (வயது 45) என்பவரின் குடும்பத்தினர் பலியாகி இருப்பது தெரியவந்தது. அவதேஷ் பல்லா, அவரின் மனைவி சுதா, மகன்கள் லல்லா, புத்து, ஹீரோ, கரண், கோமல், மகள் சுனைனா ஆகியோர் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
1 வயது குழந்தைக்கு மட்டும் காத்திருந்த அதிஷ்டம்:
அவதேஷின் மகளான பிட்டு (வயது 1) என்பவர் மட்டும் காயத்துடன் உயிர்பிழைத்தார். இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் சிக்கிய லாரியை இயக்கிய ஓட்டுநர் மற்றும் அவரின் உதவியாளர் ரோஹித் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது இரங்கலை தெரிவித்தார். மாவட்ட நிர்வாகம் தேவையான உதவிகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விபத்து நடந்த பின்னர் எடுக்கப்பட்ட காணொளி:
உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட காணொளி: