CAN Vs PAK (Photo Credit: @ICC X)

ஜூன் 12, நியூயார்க் (Sports News): ஐசிசி ஆடவர் T20 உலகக்கோப்பை 2024 (T20 WORLD CUP 2024) கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 22வது ஆட்டத்தில் நேற்று கனடா - பாகிஸ்தான் (CAN Vs PAK) அணிகள் மோதிக் கொண்டன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கனடா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜான்சன், அதிரடியாக அடுத்த ஆடினாலும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் விக்கெட்டை இழந்து தோல்வியை தழுவி இருக்கின்றனர்.

ரன்களை குவிக்க இயலாமல் திணறிய கனடா: ஆரோன் மட்டும் 44 பந்துகளில் 52 ரன்கள் குவித்த நிலையில், அவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய நவநீத், பிரகாத், நிக்கோலஸ், ஷ்ரேயாஸ், ரவீந்திரேபால் ஆகிய ஐந்து பேர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதனால் அணி ரன்களை குவிக்க இயலாமல் திணறிய நிலையில், இறுதியாக களமிறங்கிய வீரர்கள் சொற்பரன்களை குவித்து இருந்தனர். இதனால் கனடா அணி 20 ஓவர் முடிவில் 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. 7 விக்கெட் இழக்கப்பட்டு இருந்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் முகமத் மற்றும் ஹாரிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். Upendra Divedi Appointed as Chief Army Staff: இராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி மாற்றம்; மனோஜ் பாண்டே ஓய்வை தொடர்ந்து அறிவிப்பு.! 

அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான்: இதனையடுத்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 53 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து இறுதி அசத்து இருந்தார். இறுதிவரை அவர் விக்கெட்டையும் இழக்கவில்லை. ஒருவிக்கேட் இழந்த பின் களமிறங்கிய பாபர் அசாமும் 33 பந்துகளில் 33 ரன்கள் அடித்து இருந்தார். ஆனால், இறுதியில் அவரின் விக்கெட் சரிந்தது. மொத்தமாக 17.3 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழந்த பாகிஸ்தான் அணி, 107 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது.

அடுத்த ஆட்டம்: ஆட்டத்தின் நாயகனாக முகமது அமீர் தேர்வு செய்யப்பட்டார். பந்துவீச்சில் கலக்கிய முகமது, தான் வீசிய நான்கு ஓவரில் மொத்தமாக எதிரணியை 13 ரன்கள் மட்டும் அடிக்கவிட்டு இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்தார். இன்று (ஜூன் 12) நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா அணிகள் நியூயார்க்கில் உள்ள நாசு மைதானத்தில் மோதிக் கொள்கின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.